.

Pages

Friday, January 23, 2015

சவூதி மன்னர் அப்துல்லா காலமானார் ! புதிய மன்னராக சல்மான் அறிவிப்பு !

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் (Abdullah Bin Abdul Aziz Al Saud) காலமானார். அவருக்குச் சுமார் 90 வயது. மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத், மருத்துவமனையில் உயிர் நீத்ததாக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நுரையீரல் பிரச்சினைக் காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2005-ஆம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அண்மை ஆண்டுகளில், மன்னர் அப்துல்லா, கடுமையான மருத்துவப் பிரச்சினைகளால் அவதியுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  அவரின் சகோதரர் சல்மான், சவூதி அரேபியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டத்து  இளவரசராகவும், அரசு வாரிசாகயும், இளவரசர் முக்ரின் (Moqren) அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தமது அரசாட்சி காலத்தில் அவர் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் வலுவான உறவை நிலைநட்டினார். சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்குறுதி  முதன்முறையாக பெற்றதும் அவரது அரசில்தான்.

11 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    உயிர்மூச்சு “பெண்டுலத்தின்”
    ஊஞ்சலாட்டம்
    காலச் சக்கர முட்களின் சுழற்சிக்
    கடிகாரம்
    #வாழ்க்கை#

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல'
      "பொது சமாதியில் அடக்கம் செய்யப்படும் அப்துல்லாஹ்வின் உடல்....!!

      உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தியாக அப்துல்லாஹ் அவர்கள் இன்று மரணமடைந்து விட்ட செய்தி சவூதி மக்களுக்கு மட்டுமின்றி உலக முஸ்லிம்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

      செல்வ வளம் மிகுந்த ஒரு நாட்டின் மன்னர் என்பதை விட உலக முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மக்கா மதினா ஆகியவற்றின் பராமரிப்பாளர் என்ற அளவில் சவூதி அரசருக்கு உலக அரங்கில் சிறப்பிடம் உண்டு. தனது வாழ்நாளில் பல முன்னேற்ற பணிகளை முடுக்கி விட்டு சவூதி மிகச் சிறந்த இடத்தை உலக அளவில் பெறுவதற்கு இவரின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது.

      அரசர் அப்துல்லாஹ் அவர்கள் இந்திய திருநாட்டின் நட்பினை உயர்வாக கருதினார், இந்திய பயணத்தின் போது இந்தியாவை தன்னுடைய மற்றொரு தாய் வீடு என்று நெஞ்சம் நெகிழ கூறினார்.

      மன்னராக பொறுப்பேற்ற தம்முடைய 10 ஆண்டுகால ஆட்சியில் அமைதி வாழ்கையை மக்களுக்கு வழங்கி சவூதியின் தரத்தை உலக அரங்கில் பிரதிபலித்து முத்திரை பதித்தார்.

      மேலும் பாலஸ்தீனம், சோமாலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு வாரி வாரி வழங்கிய கருணை உள்ளம் கொண்ட வள்ளலாக திகழ்ந்தார்.

      உலக சமாதானத்திற்கும் மன்னர் அப்துல்லாஹ் பெரும் முயற்சியை மேற்கொண்டார்.

      இவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு தலைவர் இறந்துள்ளார். ஆனால் சவூதியில் அன்றாட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஊரைப் போல் கடைகள் அடைக்க நிர்பந்திக்கப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் எந்த பயமும் இன்றி வழமைபோல் செல்கின்றன. மொத்தத்தில் இவரது இழப்பு சவூதியின் அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

      எல்லோருக்கும் எங்கு இறப்புக்கான தொழுகை நடைபெறுமோ அந்த இடத்தில் இவருக்கும் தொழுகை நடத்தப்படும்.

      எல்லோரையும் புதைக்கக் கூடிய பொது மையவாடியில் இவரது உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எந்த கட்டிடங்களும் கட்டப்படாது.

      வெறும் மண்ணைக் கொண்டு இவரது உடல் மூடப்படும். இறப்புக்கு முன்னால் தான் அவர் சவூதியின் மன்னர். இறப்புக்கு பின்னால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன்தான். அதனை செயலில் காட்டி வருகின்றனர் சவூதி ஆட்சியாளர்கள்.

      அப்துல்லாஹ்வின் மரணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

      - முகநூல் முஸ்லிம் மீடியா

      Delete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.