.

Pages

Sunday, January 25, 2015

அதிரையில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகம் !

இந்திய தேர்தல் ஆணையம் இன்று 25–ந் தேதி 5–வது தேசிய வாக்காளர் தினத்தை நாடு முழுவதிலும் கொண்டாடிடவும் அதன் மூலமாக இந்த 5–வது தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோளான சுலபமான பதிவு, சுலபமான திருத்தம் என்பதனை பொது மக்களிடையே பரப்பி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி அதிரை கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று துவங்கியது.

இதில் ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண், பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு உறுப்பினர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலையில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும் அதிரையின் பிற பகுதிகளின் புதிய வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மூலம் அட்டைகள் விநியோகிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் அவரவர் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.