.

Pages

Friday, January 23, 2015

சவூதியின் புதிய மன்னர் !

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் மரணமடைந்ததை தொடர்ந்து, இவரின் சகோதரர் சல்மான் புதிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை நிறுவியவரான மறைந்த மன்னர் அப்துல் அஜீஸ் அல் சாத்- ஹுஸ்ஸா பின்ட் அகமது சுடேரி தம்பதியின் 12 பிள்ளைகளில் ஒருவர்தான் சல்மான்.

அல் சாத் குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்னை என்றால் சல்மான் தான் சமரசத்தை ஏற்படுத்துவாராம். சவுதியில் உள்ள பழங்குடியின பிரிவு சமூகத்தாருடன் சல்மானுக்கு நல்ல தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

1963ம் ஆண்டு சல்மான், ரியாத் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பாலைவன நகராக அறியப்பட்ட ரியாத்தை சொர்க்கபுரியாக மாற்றிக் காட்டியவர் சல்மான் தான். வானுயர்ந்த கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள், மேற்கத்திய உணவகங்கள் என்று இன்று ரியாத் மாடர்ன் நகராக மிளிர்வதற்கு இவர் தான் காரணம். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள், தூதர்களுடனும் இவருக்கு நல்ல தொடர்பு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.