.

Pages

Sunday, January 25, 2015

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு!

பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2.30 கோடி மின் இணைப்புகளில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இந்தப் புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்விதக் கட்டணமுமின்றி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை மாற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் மாற்றுவதற்கு யாரேனும் பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்

எனவும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி:தினமணி

1 comment:

  1. இவர்கள் வரும்போது வீட்டில் ஆள் இருக்கணும் இல்லேயேல் தெண்டமாக பணம் கொடுக்க வேண்டிய இருக்கும், ஒரு மாதம் வீடு பூட்டி கிடந்தாலும் மின்சார கட்டண பில் ( அதாவது போன தடவை கட்டிய தொகை ) வரும் காரணம் கேட்டா அட்ஜஸ்ட்மென்ட். விடாமல் குடைந்தால் உண்மை கண்டுபிடித்து விடலாம் இது ஒருவரின் அனுபவம்- உஷார் மக்களே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.