.

Pages

Thursday, January 29, 2015

மாயமான மலேசிய விமானத்தை கிண்டலடித்து விளையாட்டு போட்டியா !?

மாயமாகி போன மலேசிய விமானம் MH 370-யை கிண்டலடிக்கும் விதத்தில் நியூசிலாந்தில் விளையாட்டு போட்டிகளை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஒரு கடற்கரை தீவில் வருடந்தோரும் Golden Bay competition என்ற அமைப்பு வினோதமான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டிற்காக ‘கடலில் படகுகளை மூழ்கடிக்கும்’ போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் அட்டைகளில் வித்தியாசமாக படகை செய்து அதை கடலில் மூழ்க வைப்பவருக்கு முதல் பரிசு என அறிவித்தது.

நியூசிலாந்தை சேர்ந்த Robert Chubb என்பவர் கடந்தாண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் காணாமல் போன Malaysia Airlines flight MH370 போன்று ஒரு அட்டை படகை உருவாக்கி அதை கடலில் மூழ்கடித்தார், இதற்கு முதல் பரிசும் கிடைத்தது. ஆனால் காணாமல் போன் விமானத்தை கிண்டலடிக்கும் விதமாக அந்த படகு இருந்ததால் பார்வையாளர்கள் பலரை அதிருப்தியில் ஆழ்த்தியது.

மாயமான விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் சகோதரியான சாரா வீக்ஸ் என்பவர் மலேசியா விமானம் காணாமல் போய் இன்னும் இரு வருடம் கூட ஆகாத நிலையில், அதை கிண்டலடிக்கும் விதத்தில் படகை மூழ்கடித்தது வேதனை தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த விமானத்தில் போட்டியில் பங்கு பெற்றவரின் உறவினர் யாராவது சென்றிருந்தால், இப்படி கேவலமாக கிண்டலடிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டியை ஏற்பாடு செய்த Dave Myall என்பவர், சாரா வீக்ஸின் இழப்பு வருந்தத்தக்கது தான். ஆனால் இந்த விளையாட்டு போட்டிகள் உள்ளூரில் மட்டும் நடப்பதால் தவறு இல்லை. இதை ஊடகவியலாளர்கள் பெரிதுபடுத்தினால் தான் பிரச்சனையாக உருவெடுக்கும் என்றார்.

Source : dailymail

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.