அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதி குடியிருப்பில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் தொங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கையை மேலே தூக்கி தொடும் அளவிற்கு தொங்கி காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் நடமாடி வருவதால் அப்பகுதியினர் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
' 3 பேஸ் இணைப்புகளை கொண்ட இந்த மின்கம்பி பொதுமக்களின் தலையில் மீது எந்நேரமும் விழக்கூடிய சூழலில் அபாயகரமாக தொங்கி காணப்படுகிறது. மேலும் இரு பக்கங்களில் காணப்படும் மின்கம்பங்கள் மிகவும் வலுவிழந்து காணப்படுகின்றன. பலத்த காற்று வீசினாலோ அல்லது பாதையின் குறுக்கே நூண்டப்பட்டுள்ள மற்றொரு மின்கம்பத்தில் வாகனங்கள் மோதினாலோ மின்கம்பிகள் அறுந்து பொதுமக்கள் மீது விழும் சூழல் அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு மூன்று இடங்களில் மின் கம்பிகள் அறுந்துள்ளதாகவும், அறுந்த பகுதிகளை மின்கம்பிகளை கொண்டு ஒட்டு போட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினார்கள்.
இதுதொடர்பாக அதிரை மின்சார வாரியத்தில் பல முறை எடுத்து சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என வருத்தமடைந்தனர். மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்டோர் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்செல்ல வேண்டும். எங்கள் பகுதியில் பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட மின்சார வாரியம் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்து தரவேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.