.

Pages

Wednesday, January 21, 2015

ஓரம்போ ! ஓரம்போ !! தள்ளுமாடல் வண்டி வருது, [ படங்கள் உண்டு ]

ஓரம்போ ஓரம்போன்னு கத்திகோன்னு வந்தாலும் அம்புட்டு கூட்டமா தெருவுலே?

இங்க பாருங்க:-
இந்த வண்டியில் பெண்களுக்கே உரித்தான சில சாதனங்களை வைத்து “புகைப்படத்திற்கு முகம் காட்ட விரும்பாத ஒருத்தர் தெரு தெருவா வியாபாரம் செய்து வருகின்றார். அதே சமயத்தில் அதிரையில் இ.சி.ஆர். சாலையைத் தவிர மற்ற அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கின்றது.

அது சரிங்க இந்த குண்டும் குழியுமா இருக்கும் சாலையிலே இந்த வண்டியை எப்படி இவ்வளவு தூரம் தள்ளிக்கிட்டு அல்லது இழுத்துக்கிட்டு வந்திருக்க முடியும்.

அவரிடம் கேட்டதற்கு, வயிற்று பிழைப்பு இருக்குதே என்ன செய்வது? எதிர்நீச்சல் போட்டுதான் வரமுடிந்தது என்றார். எங்க வீட்டு வாசலருகே வந்தவரிடம் ரூபாய் ஐந்து கொடுத்து ஒரு சீப்பை வாங்கி அவரை சந்தோஷப்படுத்தினேன்.

குறிப்பு:-
இந்தக் வண்டிக் காரரைப் போல் ஏனைய வண்டிக் காரர்கள், பொது மக்கள், பள்ளி வாகனங்கள், பள்ளிக் குழந்தைகள், வியாதியஸ்தர்கள், வயோதிகர்கள், இன்னும் பலர் மிகவும் சிரமப்பட்டுத்தான் இந்த குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை தினந்தோறும் கடந்து செல்கின்றனர்.

அதிரை சாலைகளுக்கு விடியுகாலம் எப்போது?

மிகவும் பரபரப்பாக காணப்படும் மெயின் ரோடே நல்ல நேரம் பார்த்து அதாவது இராகு காலம், அஷ்டமி, நவமி எல்லாம் பார்த்து ஒவ்வொரு வேலையும் ஆமை வேகத்தில் நடக்குதுன்னா, தெருக்களில் உள்ள சாலைகளை பற்றி எப்படி நினைப்பது.  

ஒன்னு செய்யலாம், அதாவது அதிரையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்தால், ஒரு பத்து அல்லது பதினைந்து கோடி ரூபாய் வசூல் ஆகும். அதை வைத்து அதிரை சாலைகளை சீர் செய்யலாமே.

கேட்பதற்கு நல்லாத்தானே இருக்குது. முயற்சி செய்யது பாருங்க........!? பல வசைச் சொற்கள், பின் பாட்டுக்கள், முக்கத்துக்கு முக்கம் கூடி பேசுதல், இன்னும் பல அவதூறுகள் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

இதெற்கெல்லாம் பயந்தால் சாதிக்க முடியாது வாழவும் முடியாது.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

1 comment:

  1. //அதிரையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்தால், ஒரு பத்து அல்லது பதினைந்து கோடி ரூபாய் வசூல் ஆகும். அதை வைத்து அதிரை சாலைகளை சீர் செய்யலாமே.//

    நல்ல ஆலோசனைத்தான்....!

    ஆனால் இனி அரசாங்கம் நம்மிடம் எந்த வித வரியும் வசூல் செய்யமாட்டோம் என உத்தரவாதம் தந்தால் நிச்சயம் சாத்தியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.