.

Pages

Thursday, January 22, 2015

முத்துப்பேட்டை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு!

முத்துப்பேட்டையில் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் 25 ஆம் ஆண்டாக கடந்த 24-12-2014 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழச்சியில் தினமும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி 8-20 மணிக்கு நிறைவுபெறும். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று புகாரி மஜ்லீசின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணிக்கு துவங்கியது. இதில் திருக்குர்ஆன் ஓதுதல், மவ்லவி அதிரை ஹாரூன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இறுதியில் துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டன.

செய்தி மற்றும் படங்கள்:
சுனா ஈனா, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.