.

Pages

Thursday, January 22, 2015

பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்- ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
     
இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஐநூறுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அறிவழகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் ஆர்.ஞானசூரியன் வரவேற்றுப் பேசினார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் மா.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகி தங்கராசு ஆகியோர் உரையாற்றினர். நல்லதம்பி நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.

1 comment:

  1. ஓஹோ, இன்று ஒருநாளைக்கு தமிழ்நாட்டில் லஞ்சம் குறைஞ்சு இருக்குமுன்னு சொல்லுங்க. அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து விவரங்களை ஆராய்ந்தால் பார்த்தால் உண்மை நிலையை அறிய முடியும். அதிகாரிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் சேர்ந்து தமிழகத்தை கொள்ளை அடித்து விட்டார்கள். மக்கள் அண்ணாவையும் எம்ஜியாரையும் புகழ்கிறார்கள் ஆனால் தற்போது திராவிட தலைவர்கள் வழக்குகளுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள், கேவலம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.