நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓகேஎம் சிபகத்துல்லா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 'அழகு மிகு அதிரை' என்ற தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அதிரையில் உள்ள முக்கிய பகுதிகளை தத்தெடுத்து அங்கு காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் மொத்தம் 50 மாணவர்கள் ஈடுபட்டனர். சுகாதாரத்தை வலியுறுத்தி கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இவர்களுக்கு உதவியாக அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் சென்றனர்.
முன்னதாக 'அழகு மிகு அதிரை' தூய்மை திட்டத்தை பள்ளி முதல்வர் பேராசிரியர் பர்கத், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபகத்துல்லா, முஹம்மது சலீம், முஹம்மது இப்ராஹீம் மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் துவக்கி வைத்தனர்.
அனைவருக்கும் என் இனிய 66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள். 'அழகு மிகு அதிரை' - தூய்மை திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களும் கூட.
ReplyDeleteதூய்மை திட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பது பாராட்டுக்குரியது
ReplyDelete