.

Pages

Monday, January 19, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 19 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/01/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. நெய்னா முகமது (கொள்கை பரப்பு செயலாளர்)
முன்னிலை             : சகோ. A.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை              : சகோ.  அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை     : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக 3 தையல் மிஷின் வழங்குவதென முடிவு செய்யபட்டு அதன் பிரகாரம் கடந்த மாதம் (DECEMBER) ஒரு மிஷினும், இந்த மாதம் (JANUARY) இரண்டு மிஷினுக்கான தொகையை தலைமையகத்துக்கு அனுப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக     உதவி செய்தவர்களுக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது .

2) வாரா நகைக்கடன் தவனை முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்தை மேலும் சிறப்பான முறையில் கெடு முடிந்தவுடன் வசூலிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட்டது.

 3)  கல்வி கடன் பெற தகுதியிருந்தும் கேட்டு பெற தயக்கத்துடன் உள்ளவர்களை கண்டறிந்து உதவி செய்வது சம்பந்தமாக முடிவு செய்யப்பட்டது.

 4) மேலும் ABM ரியாத் கிளையின் சார்பாக ஒரு தனிப்பட்ட நபரின் உதவியை கொண்டு நமதூரை சார்ந்த ஜனாப். ஜெய்னுதீன் கடற்கரை தெரு அவர்கள் கடந்த 3 மாதம் காலமாக நோய்வாய்பட்டு பொருளாதார உதவியை நாடிய வகையில் அதற்கான இந்த நபரின் மருத்துவ செலவை ரியாத்திலிருந்து அனுப்பி கொடுக்கப்பட்டது. இந்த உதவி செய்தவர்களுக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 5) நடந்து முடிந்த இக்கூட்டத்திற்கு புதிய, பழய உறுப்பினர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது  வந்து மிகவும் சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி FEBRUARY 2015  ஹாராவில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.