.

Pages

Wednesday, January 21, 2015

காக்கைகள் சரணாலயமாக மாறிவரும் பிலால் நகர் ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் ஆற்று நீர் வருகையால் செடியன் குளம் நிரம்பி வழிந்தது. நிரம்பி வழியும் தண்ணீர் பேரூராட்சி சார்பில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் செய்னாங் குளத்திற்கு செல்லாமல் அருகில் உள்ள பிலால் நகர் குடியிருப்பில் புகுந்து சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மழை நின்ற பிறகும் கடந்த சில மாதங்களாக செடியன் குளத்தின் தண்ணீர் வீணாக கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் காக்கைகள் வரத்து அதிகமாகியுள்ளது. தினமும் காக்கை கூட்டங்கள் வந்து செல்கின்றன.

தற்போது காக்கைகளின் புதிய சரணாலயமாக உருவெடுத்துள்ள பிலால் நகர் பகுதியை பொதுமக்கள் - சிறுவர்கள் வேதனையுடன் கண்டு செல்கின்றனர். இந்த பகுதியை நிரந்தர காக்கைகள் சரணாலயமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியின் ஆர்வலர்கள் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

படம் புடிச்சது
தாஹிராவின் தந்தை

2 comments:

  1. அம்மை, காச்சல் மற்றும் தொற்று நோய்பரவாமல் தடுக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் இந்நோய்கள் வரக்காரணம் தேங்கி நிற்கும் நீராலே!, மழைக்காலத்தில் தான் சுத்தப்படுத்த முடியாது இப்பவுமா? இன்று காக்கைகளின் சரணாலயமாக காட்சியளிக்கும் அடுத்த வாரத்தில் பன்றிகள் ஆக்கிரமிப்பு செய்து நோய்கள் உற்பத்தி தொடங்கும், தூங்கும் பேரூர் நிர்வாகம் கொசுமருந்து அடித்து தன கடமை நிறைவேற்றி கொள்ளும்.

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கௌன்சிலர்கல் ? கொடிபிடிக்கும் அரசியல் பிரமுகர் இவர்களுக்கு இந்த சரணாலயம் பற்றி தெரியலையா?

    பொதுமக்களே இதனை நிவர்த்திபண்ணனும் என்றால் எதற்கு துப்பிலாத அதிகாரிகள்? உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் அதிகாரிகளே பொது மக்களை சோதிக்காதீர்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இந்தப் பிரச்சனை இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக தொடர்ந்து ‎நமது வலை தளங்களில் பதியப்பட்டு வருகின்றது, இன்று வரை எந்த ஒரு ‎அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை, அப்பகுதி மக்களும் ஒத்துழைக்க ‎வில்லை.‎

    தூங்கும் அதிகாரிகளையும், ஒத்துழைக்காத மக்களையும் எப்படி ‎பாராட்டுவது?‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.