.

Pages

Wednesday, January 21, 2015

யுஏஇ விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா விதிமுறைகள் மாற்றம் !

டூரிஸ்ட் மற்றும் விசிட் விசாவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் 10 நாட்கள் மற்றும் 30 நாட்கள் நீட்டிப்பு வசதியையும் ரத்து செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை 2015 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட , ஒரு முறை மட்டும் உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa - Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 250, இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 210.

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட பல முறை உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa - Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350.

விசிட் விசாவின் கட்டணமும் அதிகரித்துள்ளதாகவும், அதன்படி முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350 எனவும் இதற்கு திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவில் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 300.

அதேபோல தொண்ணூறு நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 90 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 790 எனவும் இதற்கும் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவிலும் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 660 எனப்து குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரையர்கள் அதிரையில் காலி மனைகளை காண்டாமிருகம் அளவுக்கு ‎விலை கொடுத்து வாங்கும்போது, இந்த டூரிஸ்ட் மற்றும் விசிட் விசாவின் ‎விலை உயர்வு அதிரையர்களை பாதிக்காது என்றே நினைக்கிறேன். ‎காரணம் இது அவர்களுக்கு சோளப்பொறி சாப்பிடுவது போன்றது. ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.