.

Pages

Wednesday, January 21, 2015

வெள்ளிக்கிழமை தினத்தை விடுமுறை தினமாக பெற்றுத்தந்த பெருமை 'கல்வித்தந்தை' காதர் முகைதீன் அப்பாவை சாரும்: CMN சலீம் உரை !

அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு 'கல்வி' சேவையை வழங்கியவர் காலஞ்சென்ற ஹாஜி எம்.கே.என்.காதிர் முகைதீன் மரைக்காயர் ஆவார்.

நமது இந்திய திருநாட்டில் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின கல்வி நிலையங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் போராடி வெள்ளிக்கிழமை தினத்தை அரசு விடுமுறை தினமாக பெற்றுத்தந்த பெருமை நமது கல்வித்தந்தை காதர் முகைதீன் அப்பாவவைத்தான் சாரும் என கல்வியாளர் சிஎம்என் சலீம் வளைகுடா நாட்டில் நடைபெற்ற கல்வி கருத்தரங்க நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியது இன்றைய இளைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

11 comments:

  1. We never know before this news , really very great man ,, Allah forgive his all sins and help him to go heaven

    ReplyDelete
  2. ஒர் மாபெரும் வரலாற்று சாதனையின் சொந்தக்காரர் எங்களின் கல்வித்தந்தை காதிர் முகைதீன் அப்பா என்பதை எங்களுக்கும், உலகிற்கும் நினைவுபடுத்திய CMN சலீம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    யா அல்லாஹ், காதிர் முகைதீன் அப்பா, ஷேக் ஜலாலுதீன் அப்பா மற்றும் அவர்களின் வழியில் முஸ்லீம் சமுதாய கல்வி விழிப்புணர்வுக்காக பயணிக்கும் CMN சலீம் ஆகியோர்களின் மறுமை வாழ்வை வெற்றியாக்கித் தருவாயாக!

    ReplyDelete

  3. ஒர் மாபெரும் வரலாற்று சாதனையின் சொந்தக்காரர் எங்களின் கல்வித்தந்தை காதிர் முகைதீன் அப்பா என்பதை எங்களுக்கும், உலகிற்கும் நினைவுபடுத்திய CMN சலீம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    யா அல்லாஹ், காதிர் முகைதீன் அப்பா, ஷேக் ஜலாலுதீன் அப்பா மற்றும் அவர்களின் வழியில் முஸ்லீம் சமுதாய கல்வி விழிப்புணர்வுக்காக பயணிக்கும் CMN சலீம் ஆகியோர்களின் மறுமை வாழ்வை வெற்றியாக்கித் தருவாயாக

    ReplyDelete
  4. பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    لَّٰكِنِ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ ۚ وَالْمُقِيمِينَ الصَّلَاةَ ۚ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَٰئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا
    எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். 4:162

    وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَىٰ يَوْمِ الْبَعْثِ ۖ فَهَٰذَا يَوْمُ الْبَعْثِ وَلَٰكِنَّكُمْ كُنتُمْ لَا تَعْلَمُونَ
    ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.” 30:56

    பட்டுக்கோட்டை மணிகூண்டுபள்ளி , மதராஸ அதனை நிர்வகிக்க இன்றைய மதிப்பில் பலோகடி மதிப்புள்ள சொத்துக்கள் என காதர்மொய்தீன்(யர்ஹமுல்லாஹ் -அல்லாஹ் அவர்களுக்கு கிர்பைபுறிவானாக) அப்பா அவர்கள் வல்லல் தன்மைக்கும் நினைவுகூரவேண்டும்

    ReplyDelete
  5. இன்று பாரதம் முழுதும் இஸ்லாமியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அனுபவித்து வருகிறோம் என்றால், இந்திய தேசத்தின் தென் கோடியில் வாழ்ந்து மறைந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய நம் கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி SMS சேக் ஜலாலுதீன் அவர்களின் முயற்சியில் கிடைத்த மாபெரும் வெற்றியே.

    1950 ஆம் ஆண்டு எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாக ஞாயிற்றுக் கிழமை என அரசு அறிவித்த போது, முஸ்லிம்களாகிய எங்களுக்கு வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையே முக்கியமானது. எனவே வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கல்வித்துறையிடம் அனுமதி கேட்ட போது, இது அரசியல் சாசனம் சம்மந்தமானது என பதில் கிடைக்க, கல்வித்தந்தை மர்ஹூம் ஹாஜி SMS சேக் ஜலாலுதீன் அவர்கள் அன்றைய மாவட்ட நீதி மன்றம் திருவையாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை உயர் நீதி மன்றம் மட்டுமே முடிவு செய்யும் என ஆர்டர் கிடைத்ததும், உடன் உயர் நீதி மன்றத்தை அணுகி வெற்றி கண்டார்கள்.

    இருப்பினும் அரசு கசட்டில் வெளியிட்டு அனுமதி கிடைத்த பின்னர் செயல் படுத்த முடியும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது. இதனை அரசு கசட்டில் வெளியிட்ட போது, அப்போது எந்த மறுப்பும் எழவில்லை. எனவே முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் வெள்ளி கிழமை விடுமுறை நாளாக பயன் பெறலாம் என முடிவு கிடைத்தது.

    இதை ஆதாரமாகக் கொண்டு, இந்தியாவின் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் வெள்ளிக் கிழமை விடுமுறை தினமாக இன்றும் பயன் பெறுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Brother Noor
      Please write a separate article to know more about this issue

      Delete
  6. அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்விநிலையங்கள் 65 உள்ளதாக சொல்லப்படுகிறது, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க கல்வித்தந்தை நமக்காக போராடிவாங்கி தந்தார் என்று நினைக்கும்போது சந்தோசம், பெருமை தருகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நடத்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் 2 ம் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை, ஊ ஓ தொ பள்ளி எண் 1 க்கு ஞாயிறு கிழமைதான் விடுமுறை, இதை பார்க்கும் போது எங்கோ இடிக்குதே. விபரம் தெரிந்தவர்கள் இதனை விளக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. //அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நடத்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் 2 ம் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை, ஊ ஓ தொ பள்ளி எண் 1 க்கு ஞாயிறு கிழமைதான் விடுமுறை, இதை பார்க்கும் போது எங்கோ இடிக்குதே. விபரம் தெரிந்தவர்கள் இதனை விளக்கவும்.///sariyaga sonneergal....எங்கோ இடிக்குதே?

      Delete
  7. //அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நடத்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் 2 ம் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை, ஊ ஓ தொ பள்ளி எண் 1 க்கு ஞாயிறு கிழமைதான் விடுமுறை, இதை பார்க்கும் போது எங்கோ இடிக்குதே. விபரம் தெரிந்தவர்கள் இதனை விளக்கவும்.//

    முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் எங்கள் பகுதியின் கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயம் வெள்ளிக் கிழமை விடுமுறை தேவை என்று கோரிக்கை வைத்துதான் நம் கல்வித் தந்தை மர்ஹூம் ஹாஜி SMS சேக் ஜலாலுதீன் அவர்கள் கல்வித் துறையை நாடினார்கள். இதையே படிப்படியாக உயர்நீதி மன்றம் வரை சென்று வெற்றி கண்டார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் அதிகமாக பயிலும் மேலத் தெரு பள்ளிக்கூடம், நடுத்தெரு பள்ளிக்கூடம், எண் 2 பள்ளிக்கூடம் இவைகளுக்கு வெள்ளி விடுமுறையும், எண் 1 பள்ளிக்கூடத்தில் முஸ்லிம் மாணவர்கள் குறைவாக பயிலுவதால் அங்கு மட்டும் ஞாயிறு விடுமுறையும் தொடர்கின்றன.

    இதைத்தான் CMN சலீம் அவர்களும் தன்னுடைய சொற்பொழிவில், முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதியின் கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயம் வெள்ளிக் கிழமை விடுமுறை தினமாக விடவேண்டும் என்ற அனுமதியை பெற்றுத் தந்தார்கள் என்ற செய்தியை குறிப்பிடுகிறார்.

    ReplyDelete
  8. கல்விப் பெரு வள்ளல் மர்ஹூம் காதர் மொஹிதீன் அப்பா அவர்கள் எம் கே என் டிரஸ்டை நிறுவி தனது திரண்ட சொத்துக்களை அர்ப்பணித்து ஊன்றிய விதைக்கு கல்வித் தந்தை மர்ஹூம் ஷேக் ஜலாலுதீன் அவர்கள் நீரூற்றி வளர்த்து ஆண் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆகியவற்றை உருவாக்கினார்கள்.

    காதர் மொஹிதீன் அப்பா அவர்கள் என்கிற ஆலமரத்தின் வீச்சியடையாத விழுதுதான் கல்வித் தந்தை ஷேக்ஜலாலுதீன் அவர்கள்., அப்பா கண்ட கனவுகளை நனவாக்கி நமது கரங்களில் செயல்வடிவமாகத் தந்தவர்.

    சலீம் அவர்கள் உடைய பேச்சில் காதர் மொகிதீன் அப்பா அவர்கள் என்று குறிப்பிட்டாலும் - கல்வித்தந்தை ஷேக் ஜலாலுதீன் அவர்கள் செயல்பட்டு இருந்தாலும் அதன் பேரும் பெருமையும் அவர்கள் இருவருக்கும் சேரும். ஒருவர் விளக்கு என்றால் மற்றவர் அதன் வெளிச்சம்.

    அவர்கள் இருவருக்கும் இறைவன் நற்பதவியை வழங்குவானாக! ஆமீன்.

    ReplyDelete
  9. இத்தனை காலமாக. அறிந்திராத உண்மையை அறியத்தந்த சகோதரர் CMN சலீம் அனைவருக்கும் அறியத்தந்துள்ளார். நன்றியுடன் வாழ்த்துக்க ள்.
    இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு தன்னடக்கத்துடன் வாழ்ந்து மறைந்த காதிர் முஹைதீன் அப்பா போற்றப்பட வேண்டியவர்கள் அவர்களுக்கா நாம் துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.