.

Pages

Saturday, January 24, 2015

துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய பொதுக்கூட்டம்!

23/01/2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பர் துபாயில் உள்ள முஸல்லா டவரில் இந்திய அரசியலை நமதாக்குவோம் ! தேசத்தை பொதுவாக்குவோம் ! என்ற தலைப்பில்  இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அமீரக மாநில துணைத் தலைவர் ஜனாப் முபாரக்  தலைமை வகித்தார் B.அப்துல் ஹமீது [ தமிழ் மாநில பொதுச் செயலாளர்  சோசியல்  டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ] சிறப்புரையாற்றினார்

சிறப்பு அழைப்பாளராக அஷ்ரப் [ கேரளா ஜனாதிபதி விருது பெற்ற சமூக ஆர்வலர் ] வருகை தந்திருந்தார்.

முகம்மது முன்னவர் , [ அமீரக தேசிய பொதுச் செயலாளர் ] சுஹைல் யூசுப் [ துபாய் மண்டல தலைவர் ], ஹசன் பாட்சா,[ ஷார்ஜா மண்டல தலைவர் ] கியாசுதீன் [ அபுதாபி மண்டல தலைவர் ],ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் அப்துல் ரஹ்மான் [ சார்ஜா மண்டல பொதுச் செயலாளர் ] நன்றி யுரையாற்ற  கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

இக்கூட்டத்திற்கு திரளாக தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் வந்து கலந்து  கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.