.

Pages

Friday, August 21, 2015

பட்டுக்கோட்டை அருகே திருமாவளவனை கொல்ல சதி: பெட்ரோல் குண்டுகளுடன் 12 பேர் கைது !

பட்டுக்கோட்டை அருகே உள்ள வடசேரியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற இருந்தது. பின்னர் அவர் திருவாரூரில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருந்தார்.

திருமாவளவன் வடசேரி வரக்கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வடசேரி ரவுண்டானா அருகில் போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் வாலிபர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். அவர் கையில் காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்கள் 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1. மணிகண்டன், 2. யோகேஸ்வரன், 3. அன்பானந்தம், 4. மதியழகன், 5. சக்தி என்கிற சேதுராமன், 6. வினோத்குமார், 7. கண்ணன், 8. மற்றொரு மணிகண்டன், 9 மணிமாறன், 10. மனோகரன், 11. திவாகர், 12. சரண்ராஜ்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது வடசேரிக்கு கொடியேற்று விழாவிற்கு வரும் திருமாவளவன் மீது பெட்ரோல் குண்டு வீச இருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரிப்பு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே திருமாவளவனை வடசேரிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் கூறி அவரை மன்னார்குடி வழியாக திருவாரூருக்கு திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் வடசேரி கொடியேற்று விழா நடைபெறவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.