.

Pages

Saturday, August 22, 2015

அதிரையில் மர்மமாக இறந்த சிறுவனின் உடல் தோண்டி எடுத்து பிரத பரிசோதனை !

அதிரையை சேர்ந்தவர் முகம்மது தம்பி. இவரது மகன் அப்துல் பாஸித் [ வயது 36 ] எலெக்ட்ரிஷியன் தொழில் செய்து வருகிறார். அதிரை அடுத்துள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சந்திரா [ வயது 30 ] கணவனை இழந்தவர். இவருக்கு 3 குழந்தைகள். இவரது இளைய மகன் அபினேஷ் [ வயது 4 ]. அப்துல் பாஸித்துக்கும், சந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவன் அபினேஷ் நேற்று இரவு மர்மமான முறையில் இறந்து போனதாகவும், உடலை ஈசிஆர் சாலையில் உள்ள ஏரிப்புறக்கரை சுடுகாட்டில் புதைத்து இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியினர் போலீசுக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பிச்சை தலைமையில் காவல்துறையினர் அப்துல் பாஸித், சந்திரா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 'கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டின் கழிவறையில் சிறுவன் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகவும், தலையில் இரத்த கசிவு ஏற்பட்டதாகவும், உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும், தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் வாந்தி எடுத்ததாகவும், இதையடுத்து சிறுவன் நேற்று இரவு உயிரிழந்ததாக கூறியிருப்பதாக தெரிகிறது.

போலீசார் சிறுவனின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல் பாஸித்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை தொடர்ந்து பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன் தலைமையில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை, பேராவூரணி இன்ஸ்பெக்டர் அன்பழகன், அதிரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுந்தர், அய்யாதுரை, வருவாய் அலுவலர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் அருள்மொழி முன்னிலையில் சிறுவனின் உடலை தோண்டி எடுத்தனர். இதன் பின்னர் அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரத பரிசோதனை செய்தனர். அதில் சில உறுப்புகள் பரிசோதனைக்காக எடுத்தனர். புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
 

1 comment:

  1. பெண்களை எப்படி ஏமாற்றி சீரழிப்பது என்று தெரிய வேண்டுமா? காதலிப்பவள் வழிக்கு வரவில்லை என்றால் எப்படி ஆசிட் ஊற்றுவது என்று தெரிய வேண்டுமா? கண்டவனிடமோ, காதலன் என்பவனிடமோ கற்பை இழந்து விட்டால், அவனது கருவை சுமந்து கொண்டு அவனையும் அவனது குடும்பத்தையும் மிரட்டித்திரிவது எப்படி என்று தெரிய வேண்டுமா? தற்கொலை செய்வது எப்படி என்று தெரிய வேண்டுமா? மனைவியையும் கள்ளக் காதலிகளையும் வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது என்று தெரிய வேண்டுமா? எளிதாகக் கொலை செய்வது எப்படி என்று தெரிய வேண்டுமா? சமூக விரோத தீவிரவாத செயல்களை எப்படி செய்வது என்று தெரிய வேண்டுமா? இன்னும் பலப்பல... வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்...Step by step விளக்கங்கள்..இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக...எங்கள் புகழ் மிக்க உங்கள் TV யில், பிரபலமான (பணத்தை மட்டுமே குறியாகக்கொண்ட...) நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் "மெகாத் தொடர்கள்". குடும்பத்தோடு பாருங்கள்..(நீங்கள் தறிகெட்டு ஒழுக்கங்கேட்டு போனால் நாங்கள் பொறுப்பல்ல..) இது போதாதா? இன்னும் வேண்டுமா? எங்கள் தொலைக்காட்சிகளிலேயே ஒளி பரப்பாகும் சிறப்பு சினிமாக் காட்சிகளைப் பாருங்கள்..சீரழிவு நிச்சய்ம். சமூகம் விழித்துக் கொள்ளுமா? அரசு தடுக்குமா?

    பிஞ்சு மனசு அபினேஷ் இறப்புக்கு காரணமானவர்களை இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் அதுவே மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.