.

Pages

Sunday, August 23, 2015

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் இல்லத் திருமண விழா !

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பில் இருந்து வருபவர் முஹம்மது இல்யாஸ். இவரது இளைய சகோதரர் முஹம்மது அபூபக்கர். இவரது திருமணம் இன்று [23-08-2015 ] காலை நமதூர் செக்கடிப்பள்ளியில் நடைபெற்றது.

ஜமாத்தார்கள் - உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் எம். நிஜாம் முகைதீன், மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், இவரது உடன்பிறந்த சகோதரர்கள் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, முஹம்மது ஸாலிஹ் மற்றும் குடும்பத்தினர் - எஸ்டிபிஐ கட்சியினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் சார்பில் நகர தலைவர் அன்வர் தலைமையில், எஸ்டிபிஐ கட்சியினர் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.