8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது.
மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, "8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கை, கல்வி கற்றலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதில் மாநில அரசுகளிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்து கேட்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கல்வி அமைச்சர்கள் தங்களுடைய முழுமையான ஆதரவினை தெரிவித்தனர். பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விடுகிற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழு ஒன்று உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையை பொறுத்தமட்டில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகள் கட்டுவதில் அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கையைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம், முதல் வரைவு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். டிசம்பரில் அது தயாராகி விடும். 10ஆம் வகுப்பு தேர்வை (சி.பி.எஸ்.இ.) மீண்டும் அரசு தேர்வாக நடத்த பரிசீலிக்கப்படுகிறது" என்று கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகும் என தெரிகிறது.
நன்றி:விகடன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.