.

Pages

Tuesday, August 25, 2015

திருமாவளவன் கொலை முயற்சியை கண்டித்து அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

கடந்த [ 20-08-2015 ] அன்று பட்டுக்கோட்டை அடுத்துள்ள வடசேரிக்கு கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் திருமாவளவன் மீது பெட்ரோல் குண்டு வீச இருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அதிரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதிரை பேருந்து நிலையம் அருகே திருமாவளவன் கொலை முயற்சி சம்பவத்தை கண்டித்தும், திருமாவளவனுக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலளார் புருசோத்மன் என்கிற புதியவன் தலைமை வகித்தார். கோட்டா பாலசேகர், பூவை புரட்சி கவி, ரஜினி வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிருஸ்தவ பேரவையின் மாநில செயலளார் தங்கமானவன், மாவட்ட துணை செயலாளர் ஆதவன், ஆனந்த குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் நம்பிகுபேந்திரன், செல்ல நாகராஜன், தங்க அப்புராஜ், ஆதி செந்தில், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார், ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம். எம். இப்ராஹீம், விவசாய விடுதலை முன்னணி வட்டார துணைச்செயலாளர் முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

முன்னதாக வரவேற்புரையை விடுதலை சிறுத்தை கட்சியின் நகர நிதி செயலாளர் பன்னீர் செல்வன் ஆற்றினார். கூட்ட முடிவில் நகர அமைப்பாளர் கவுதமன் நன்றி கூறினார். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.