குண்டாறு அணை - மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையின் இடதுபுறம் அமைந்துள்ள வல்லம் பகுதியை அடுத்து கண்ணுப்புளிமெட்டில் அமைந்துள்ளது. சுமார் 36.10 அடி உயரம் கொண்ட இந்த அணை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் கடந்த 1973 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் இந்த பகுதியில் நடைபெறும் விவசாயத்திற்கு பயனளித்து வருகிறது.
சுற்றலா பயணிகள் பாதுகாப்பாக நீராடும் வகையில் அணைக்கட்டின் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுவர ஜீப் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயணிப்பதற்காக 10 க்கும் மேற்பட்ட ஜீப் வாகனங்கள் இங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு கட்டணமாக ₹ 400 முதல் ₹ 600 வரை வசூலிக்கின்றனர். சீசன் நேரத்தில் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். பயணிகளின் சாமர்த்தியத்தை பொருத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஜீப் ரைடில் 6 முதல் 8 பேர்கள் வரை பயணம் செய்யலாம். கரடு முரடான மலைப்பாதை என்பதால் அனுபவமிக்க ஓட்டுனர்கள் மூலம் ஜீப் வாகனங்கள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் சுமார் 1 மணி நேரம் வரை குளித்துவிட்டு திரும்பும் வரை ஜீப் வாகன ஓட்டுனர்கள் நீர்வீழ்ச்சியின் அருகில் பொறுமையுடன் காத்துக் கிடக்கின்றனர். சீசன் நேரத்தில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தருகின்றனர்.
சரி... சரி... பதிவின் தலைப்பிற்கும், வாசிக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லையே என ஆதங்கப்படுவது காதிலே நல்லா கேக்குது. :)
சரி விசயத்திற்கு வருவோம்...
ஜீப் ரைடில் மகிழ்ச்சியுடன் நீர்வீழ்ச்சிக்கு பயணித்த அதிரையர்கள் அங்குள்ள கரடு முரடான மலைப்பாதையின் குறிப்பிட்ட செங்குத்தான இரண்டு அடி உயரத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜீப் வாகனம் நகர முடியாமல் வழியில் நின்றது. வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளத்தில் சிக்கிய வாகனம் நகருவதில் சிக்கல் நீடித்ததால் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அடுத்த சில நிமிடங்களில் வாகன ஓட்டுனரின் சாமர்த்தியத்தாலும், பயணிகள் கூறிய அறிவுரையாலும் வாகனம் இலகுவாக மீட்டெடுக்கப்பட்டு மெதுவாக நகர்ந்து சென்றது.
அபூ அஜீம்
உங்களை எல்லாம் இங்கு பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரம் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே என்று கோபம் கோபமாய் வருகிறது.
ReplyDeleteஅசல் மீன் வியாபாரி மாதிரி nizam bhai
ReplyDelete