தஞ்சையில் உள்ள கடை ஒன்றில் 24 வகையான மூலிகை டீ விற்பதுடன், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும் சொல்கிறார்கள். வாடிக்கையாளர்களும் நல்ல ஆதரவு கொடுக்க, வியாபாரமும் சூடாக நடக்கிறது.
வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகள் முதல், கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் ஊழியர்கள் வரை அனைவரது சோர்வையும் போக்கும் பானத்தில் டீ முதன்மையாக உள்ளது. பல சமயம் ஏழைகளின் பசியை போக்கும் உணவாகவும் டீ இருக்கிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள 'அரசன் டீ, காபி பார்' என்ற டீ கடையில், 24 வகையான மூலிகை டீ விற்பதுடன், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஃப்ளக்ஸ் போர்டில் எழுதி வைத்துள்ளார்கள். மேலும், இதில் எந்த கலப்படமும் இல்லை எனவும், இதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது எனவும் எழுதிவைத்து அசத்துகிறார்கள்.
கடை உரிமையாளரான பிரபாகரிடம் பேசினோம்.
''எங்க கடையில் அருகம் புல், தூதுவளை, வல்லாரை, ஆவாரம் பூ, நாவல் கொட்டை, செம்பருத்தி பூ என மொத்தம் 24 வகையான மூலிகை டீ இருக்கிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும் எழுதி வைத்துள்ளோம்'' என ஆர்வமாக தொடங்க,
உங்களுக்கு எப்படி இதில் ஆர்வம் வந்தது? என்றதற்கு, ''எனக்கு சிறு வயதில் இருந்தே மூலிகைகள் மேல் ஆர்வம் அதிகம். நான் என் தாத்தா, பாட்டியின் வளர்ப்பில்தான் வளர்ந்தேன். அவர்கள் எனக்கு மூலிகை டீ, கசாயம்தான் போட்டு கொடுப்பார்கள். உடல் நிலை சரி இல்லை என்றாலும் மூலிகை வைத்தியம்தான் பார்ப்பார்கள். அவர்கள் மூலம் எனக்கும் ஆர்வம் ஏற்பட, அதனுடைய பயனையும் தெரிந்து கொண்டேன்.
கடந்த ஆறு மாதத்துக்கு முன்தான் இந்த கடையை ஆரம்பிச்சேன். நானே மூலிகைகளை நேரடியா வாங்கி தூளை தயார் செய்கிறேன். மக்களும் நல்ல வரவேற்பு கொடுக்குறாங்க. பொதுவா டீ கடையில் பீடி, சிகரெட், பாக்கு விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் அந்த பொருட்களை விற்பதில்லை. மேலும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எந்த பொருளையும் விற்பதில்லை.
ஒரு டீ பத்து ரூபாய்க்கு விற்கிறேன். வெளியூரில் இருந்து வருபவர்கள் எல்லாம் என்னை பாராட்டிவிட்டு செல்கிறார்கள். அந்த பாராட்டுதான் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. எல்லாரும் நாக்குக்கு சுவையான உணவை தேடிதான் செல்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் தீங்கை பார்ப்பதில்லை. சிலர் இந்த டீயை குடிக்க விரும்புவதில்லை. அவர்களுக்காகவே பாலிலும், சில வகை மூலிகையையும் கலந்து டீ போட்டு தருகிறோம். எதிர்காலத்தில் 100 வகையான மூலிகை டீயை தருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார் உற்சாகமுடன்.
-கே.குணசீலன்
நன்றி:விகடன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.