.

Pages

Wednesday, August 19, 2015

TNPSC Group I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் போன்ற பணிகளை உள்ளடக்கிய TNPSC Group I போட்டித் தேர்வு 08-11-2015 அன்று நடைபெற உள்ளது.

இப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட வேலை நாடும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் 23-08-2015 முதல்  நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பினை 23.08.2015 அன்று காலை 10.00 மணிக்கு
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட உள்ளார்கள்.

பயிற்சி வகுப்புகள் 23.08.2015  முதல் தேர்வு நாள் வரை அனைத்து விடுமுறை நாட்களிலும் (சனி, ஞாயிறு) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க கல்லூரி பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது.  அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், அனைத்து ஊராட்சி  ஒன்றிய அலுவலகங்களிலும் போட்டித் தேர்வுகளுக்கான ஆதார நூல்கள் அடங்கிய நூலக  வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

TNPSC Group I தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் 23.08.2015  
அன்று தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ள இலவச பயிற்சி வகுப்பில் கலந்து  கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.