அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின பேருரை நிகழ்த்தினார்.
'ப்ளாஸ்டிக் இல்லா' பேரூராட்சியாக மாற்றிட அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுதி மொழியை பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாசிக்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் வழிமொழிந்தனர். இதைதொடர்ந்து பேரூராட்சி தலைவர் அஸ்லம் சார்பில் மஹல்லா நிர்வாகிகள், பஞ்சயாத் தலைவர்கள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
விழாவில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி. வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், அனைத்து மஹல்லாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
69வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெற்ற சுதந்திரத்தினை பேணிகாத்து,இந்தியன் என்ற ஓர்மொழியாக அனைவரும் இணைவோம் சுதந்திர தின விழாவில்.
ReplyDelete