அதிரை பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிரை மெயின் ரோடு M.M.S வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
தமாகாவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தமாகா இளைஞர் அணி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அதிரை கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாக சென்று அங்கே அமைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ReplyDelete