.

Pages

Thursday, August 20, 2015

'மாமேதை' அப்துல் கலாம் குடும்பத்தினருடன் ADMK தமீம் சந்திப்பு !

மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கடந்த [ 30-07-2015 ]அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு வந்து இருந்தனர்.

இந்நிலையில் அதிரை கூட்டுறவு வங்கி துணை தலைவரும், அதிமுக அதிரை பேரூர் துணைச் செயலாளருமாகிய முஹம்மது தமீம், லெ.மு.செ முஹம்மது யூசுப், சுலைமான், சேதுபாவாசத்திரம் சாதிக் ஆகியோர் இராமேஸ்வரத்தில் உள்ள 'மாமேதை' அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அங்கு அவரது மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அப்துல் கலாம் இல்லத்தில் உள்ள 'மிஷன் ஆப் லைஃப்' கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதைதொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
 
 

4 comments:

  1. ஊர் தலைவர் வழிகாட்டுதலை தொடர்ந்து ஒவ்வொரு அதிரை பிரமுகர்கள் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருவது பெருமையான விஷயம்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உன்மைதான்

    ReplyDelete
  3. இதுலயம் அரசியலா. ஊர் தலைவர் (DMK) பார்த்த உடனே இப்ப ADMK என்னப்பா இது.

    ReplyDelete
  4. இதுலயம் அரசியலா. ஊர் தலைவர் (DMK) பார்த்த உடனே இப்ப ADMK என்னப்பா இது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.