நம் இந்தியாவில் இந்துக்கள் வேறு, இந்துக்களின் பெயரைச் சொல்லி ஆட்டம்போடும் இந்துத்துவ பயங்கரவாதிகள் வேறு என்று புரிந்து வைத்துள்ளதை போன்றே விடுதலைப்புலிகள் வேறு, ஈழத்தமிழர்கள் வேறு என்ற அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொண்டவர்களாக தொடர்க,
அப்படியானால், விடுதலைப்புலிகளை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவே இல்லையா? என்ற கேள்வி வருகிறது இல்லையா! ஆம், நமது இந்திய மக்களில் சுமார் 31 சதவிகிதத்தினர் 'அச்சே தீன்' வரும், 15 லட்சம் வரும் என ஏமாறவில்லையா? அதைப்போன்றே மிகச்சிலர் கோழைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று புரிந்து கொள்க. மிகப்பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் வேறு வழியின்றி அவர்களின் சர்வாதிகாரத்தை விழுங்கிக் கொண்டு நித்தமும் செத்துப்பிழைத்து 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என வாழ்ந்தவர்கள்.
மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், 1990 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியன்று தான் இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி என்ற முஸ்லீம்கள் செறிந்துவாழும் ஊரில், பள்ளிவாசல்களில் இஷா தொழுது கொண்டிருந்த அப்பாவி, நிராயுதபாணி முஸ்லீம்கள் சுமார் 147 பேர்கள் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் 7,8 வயது பாலகர்களும் அடக்கம். யாழ்ப்பாணத்தில், மன்னாரில் விரட்டியடித்ததைப் போல் காத்தான்குடி முஸ்லீம்களையும் அச்சுறுத்தி மொத்தமாக ஊரைவிட்டு விரட்டுவதற்காக தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் அது.
(இதேபோன்றதொரு அவலம் இந்திய வரலாற்றிலும் மறைந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், தேவ்பந்த் நகரில் உள்ள ஒரு பள்ளியின் பெயர் "ஹூனி மஸ்ஜித்" அதாவது இரத்தப்பள்ளி. இந்தியாவில் சுதந்திர முழக்கங்கள் சுடர்விடத் துவங்கிய நேரத்தில் பள்ளிவாயில்களே அதன் பிரச்சாரக் களங்களாக திகழ்ந்தன. இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அங்கே தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை சுட்டுக்கொல்ல, அந்தப்பள்ளியும் இன்றளவும் முஸ்லீம்களின் இரத்தக்கறையுடன் சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட சின்னமாக நின்று கொண்டுள்ளது)
இலங்கை அரசாங்கம் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்திட முன்வந்தும் முஸ்லீம்களால் மறுக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் எனும் கோழைகள் நடத்திய படுகொலைகளின் சுவடுகள் இன்னும் நமது பள்ளிவாசல்களில் வருங்கால தலைமுறைக்கு வன்முறை கும்பலின் வரலாறு சொல்லும் சாட்சிகளாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் ஒரே நீண்ட கபுரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லீம்களால் ஒவ்வொரு வருடமும் படுகொலை நடந்த தினம் 'ஷூஹதாக்கள் தினமாக' (உயிர் தியாகிகள் தினமாக) நினைவுகூறப்பட்டும் வருகின்றன.
மிக அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் எடுக்கப்பட்ட படங்கள்
(இதேபோல் இந்தியாவிற்குள் காலணி ஆதிக்க ஆசையோடு முதன்முதலில் வந்திறங்கிய கொடூரன் 'வாஸ்கோட கமா' என்ற சண்டாளன், ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய முஸ்லீம்களை கடலில் வைத்தே கொன்றொழித்து விட்டு அவர்களின் கப்பல்களையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றான்)
கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கிணங்க, தமிழர்கள் பெரும்பானமையினராக வாழும் பிரதேசங்களில் ஈழத்தமிழர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற மோசமான சிந்தனையின் வெளிப்பாடாக பல முஸ்லீம் கிராமங்களை இரவோடு இரவாக மக்களை கொன்று, கொள்ளையடித்து, தீயிலிட்டு அங்கே மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்றி இன சுத்திகரிப்பு செய்தனர், மேலும் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை துப்பாக்கிமுனையில், சில மணிநேர அவகாசத்தில் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு அகதிகளாக விரட்டியடித்தனர்.
ஆகக்கடைசியாக, திரிகோணமலை மாவட்டம் 'மூதூர்' என்ற கடற்கரை பிரதேச முஸ்லீம்களை துப்பாக்கி முனையில் அனைத்தையும் பறித்துக் கொண்டு அகதிகளாக வெளியேற்றிய நிகழ்வுடன், கோழைப்புலிகளின் இறுதி அழிவுக்கான சமர்களம் ஆரம்பமாயிற்று. விளைவு முஸ்லீம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஈழத்தமிழர்கள் மட்டுமே இருந்த பிரதேசங்கள் இலங்கை ராணுவத்தின் மிக எளிய வேட்டைகாடுகள் ஆயின என்பதை காலம் கண்கூடாக கண்டது.
சுருக்கமாக, ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களையும் அதன் தலைவர்களை கொன்றொழித்தவர்கள். அரசியல்ரீதியாக, ஜனநாயகரீதியாக செயல்பட்ட அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் கொன்றொழித்தவர்கள், வீட்டுக்கு ஒருவர் என ஈழத்தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளை கடத்திச் சென்று கட்டாய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியவர்கள், கருவுற்ற ஈழத்தமிழ் இளம்பெண்களை மரத்திலிருந்த குதிக்கச் செய்து கருவை கலைத்து இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்தவர்கள், தன்னுடைய நிழலாக இருந்த மாத்தையா போன்ற பலரை அதிகார போட்டிக்கு பயந்து துரோக குற்றம் சுமத்தி கொன்றொழித்தவர்கள், திலீபன் போன்ற அவர்களின் அரசியல் பரிவு தலைவர்களை உண்ணாவிரதத்தின் மூலம் மடியவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள், வணிகர்கள், செல்வந்தர்களை கடத்தி இயக்கத்திற்காக தொடர்ந்து பணம் பறித்தவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈழத்தமிழ் மக்கள் சம்பாதிப்பதில் சரிபாதி சம்பளத்தை கட்டாயப்படுத்தி பிடிங்கிக் கொண்ட அராஜகவாதிகள்..
கடல்தாண்டி நம் இந்திய மண்ணிற்குள் பல பயங்கரவாத செயல்களை புரிந்தவர்கள், நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் சிதறடித்தவர்கள் என இவர்களின் அட்டூழியங்களை இன்னும் பட்டியலிட்டுக் கொண்டு போகலாம்.
முத்தாய்ப்பாக, எந்த ஈழ மக்களுக்காக போராடுவதாக சொன்னார்களோ அதே ஈழமக்களை இறுதிப்போரின் போது மனித கேடயமாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ள முனைந்த மகா தைரியசாலிகள், இவர்களுடைய இந்த இழிசெயலால் தான் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர் மாண்டனர்.
ஈழமக்களின் துயருக்கு காரணமான இந்த வில்லன்கள் மட்டுமே 'கதாநாயகர்களாக' தமிழக ஊடகங்களாலும், அவர்களின் தமிழக ஆதரவாளர்களாலும் நம் தமிழகத்தில் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு தான் இன்றைக்கும் பல தமிழார்வலர்கள் இவர்களை ஆதரிக்க காரணமாயின.
விடுதலைப்புலிகளும் தமிழர்களே என்பதற்காக அவர்களை இனவுணர்வின் அடிப்படையில் நேசிக்கும் எம்முடைய தொப்புள்கொடி உறவுகளான தமிழ் சகோதரர்களை வேண்டிக் கொள்கின்றோம், ஒருமுறையாவது ஈழ மண்ணுக்கு நேரடியாக சென்று விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் சுமார் 30 வருடங்களாக மாட்டிக் கொண்டு ஈழத்தமிழர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்து கொண்டு வாருங்கள், அதில் இலவச இணைப்பாய், காரணமேயின்றி விடுதலைப்புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளின் பட்டியலும் சேர்ந்தே வரும்.
குறிப்பு:
1. ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு ஆயுதக்குழு இன்னொரு சிறுபான்மை இனம் மீது நடத்திய தொடர் இன சுத்திகரிப்பு தாக்குதல்களை தமிழகத்தில் அவர்களை ஆதரித்த / எதிர்த்த எவருமே இன்று வரை கண்டிக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. காத்தான்குடி படுகொலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கூகுளில் kattankudy massacre என தேடினால் இன்னும் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
களத்திலிருந்து
மவ்லவி அப்துல் ஹமீது, சலாவுதீன் காக்கா உதவியுடன்
அதிரை அமீன்
படங்கள்
J. ஜமால் முஹமது
ஒரு நாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியவன் எல்லாம் "காந்தி " ஆகி விட முடியாது...பிரபாகரனுக்கு ஆயுதம் எடுக்க தெரிந்த அளவிற்கு சாணக்கியதனமோ, புத்திசாலித்தனம், தலைமை பண்பு கிடையாது..அங்குள்ள தமிழர்களின் விடுதலைக்காகவே போராடினார்...அதில் எந்த தவறும் இல்லை..ஆனால், ஒரு சர்வாதிகாரியின் போக்கிலே தன் இனத்தை சேர்ந்தவர்களையும் அழிக்க தயங்கியதில்லை..சிலர் துரோகம் செய்ததை காரணமாக இருந்தாலும் இதை முற்றிலும் சரி என்று ஏற்று கொள்ள கூடியது அல்ல.....2006 முன். அவர்கள் வலுவான நிலையில் இருந்த பொது இலங்கை இறங்கி வந்த பொது நார்வே மூலம் இவர்கள் சுயாட்சி பெரும் வாய்ப்பு வந்ததுஅனால், பிரபாகரனின் கர்வமும், தொலை நோக்கு பார்வை இல்லாமையும் , மேலும் இங்கு இருந்த சில கேடு கேட்ட அரசியல் வாதிகளின் தவறான வழி காட்டலும் அவரை மேலும் போர் புரிய தூண்டியது. பிரபாகரன் ஒரு மனசாட்சி இல்லாத மிருகம் என்பது முஸ்லிம்களை கொன்றது மூலம் உணரலாம். வைகோ தன் சொந்த தொகுதியில் அறிமுகம் இல்லாதவரிடம் தோற்க காரணமாக இருந்தவை விடுதலை புலிகளுக்கு கொடுத்த ஆதரவு தான். மனதை நெகிழவைத்த தொகுப்பு - நன்றி.
ReplyDeleteவிடுதலை புலி பயங்கரவாதிகளுக்கும் நம்ம நாட்டிலுள்ள பாசிச பயங்கரவாத காவி டவுசர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஆதாரத்துடன் தெளிவாக கூறிய சகோதர்களுக்கு நன்றி
ReplyDeleteவிடுதலை புலி பயங்கரவாதிகளுக்கும் நம்ம நாட்டிலுள்ள பாசிச பயங்கரவாத காவி டவுசர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஆதாரத்துடன் தெளிவாக கூறிய சகோதர்களுக்கு நன்றி
ReplyDeleteTamil WIkipedia article about kattankudy massacre https://ta.wikipedia.org/s/sxn
ReplyDeleteகண்கள் குளமாகின்றன.
ReplyDelete