.

Pages

Wednesday, August 19, 2015

அருங்காட்சியகமாக மாறிய மாவட்ட ஆட்சியரகம் ! [படங்கள் இணைப்பு ]

தஞ்சாவூர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
 
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்ததாவது:-   
வரலாற்று சிறப்பு மிக்க 1896-ல் கட்டப்பட்டு நகர மத்தியில் அமைந்துள்ள இந்த பழமையான கட்டிடம் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.   அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு, நீர் நிலை பயன்பாடு, கலை, பண்பாடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொது மக்களும், மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இங்கு அனைத்து தகவல் அமைக்கப்பட்டுள்ளன.
   
மேலும் பொது மக்கள் தங்களுக்கு தெரிந்த மாவட்டத்தை பற்றியோ, வரலாற்று சிறப்பு மிக்க தகவல் ஏதும் இருப்பின் அதை இங்கு காட்சிக்கு வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கலாம்.  இதை பயன்படுத்தி வரலாற்று வல்லுனர்கள் அடுத்த தலைமுறையினருக்கு  இளைய சமூதாயத்திடம் கொண்டு செல்ல சிறந்த அடித்தளமாக அமையும்.
   
இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூரின் பெருமைகளை விளக்குகின்ற வகையில் அனைத்துத் துறைகளின் சார்பில்  17 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் காலை 9 மணியிலிருந்து  இரவு 8 மணி வரை செயல்படும். அருங்காட்சியகம் பராமரிப்புக்காக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  சிறியவர்களுக்கு ரூ.2-ம்,  பெரியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படும். மேலும் உள்ளே சிறியவர்கள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன்கள்  அரங்கின்  நுழைவு கட்டணமாக ரூ.10-ம் வசூலிக்கப்படும். இவ்வரங்குகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
   
அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கூட்ட அரங்கில் மாணவர்களுக்கு தேவையான கருத்தரங்குகள் நடத்தப்படும். வாரம் ஒருமுறை கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  மேலும் ஒலி கண்காட்சியின் மூலம் தஞ்சாவூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கூறுகின்ற வகையில் 10 நிமிட ஒலிநாடா ஒளிபரப்பப்புவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதைபோல் அருங்காட்சியகத்திலிருந்து தஞ்சை பெருவுடையார் பெரியகோவிலினை இங்கிருந்து பார்ப்பதற்கான பார்வையாளர் மாடம் அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் அமைக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருங்காட்சியகம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். பொதுமக்களின் ஆதரவினை பொறுத்து மேலும் அரங்குகள் புதிதாக உருவாக்கப்படும். இந்த அருங்காட்சியகத்தினை பயன்படுத்தி வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
   
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன்,  பயற்சி ஆட்சியர் திரு.தீபக்.ஜேக்கப், கலைப்பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் திரு. குணசேகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், தொல்லியல் துறை அலுவலர் திரு.தங்கதுரை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.