.

Pages

Sunday, August 23, 2015

அதிரையில் 14 வயது சிறுமி கடத்தி சென்று கற்பழிப்பு: 4 பேர் கைது !

அதிரை செட்டித்தோப்பை சேர்ந்தவர் செல்வன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது 14 வயது மகள் செல்வி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). கடந்த 17-08-2015 அன்று மதியம் 3 மணியளவில் அப்பகுதியில் மலம் கழிக்க சென்றுள்ளார். இவற்றை மறைந்திருந்து நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி, ( வயது 19 ) விக்னேஷ் ( வயது 19 ), மாணிக்கராஜ் ( வயது 21 ), கோபால் ( வயது 20 ) ஆகிய நான்கு பேரும் செல்வியை கடத்தி சென்று அப்பகுதியில் புதிதாக கட்டிவரும் இக்பால் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வைத்து கற்பழித்தனராம். 

இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து விக்னேஷ் என்ற விக்கி, விக்னேஷ், மாணிக்கராஜ், கோபால் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:

  1. அதிரை வரலாற்றில் முதல் சம்பவமாக காவல் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது நமக்கு ஒரு எச்சரிக்கை !

    அறிமுகமில்லாத வெளி நபர்கள், கூலி ஆட்கள் உள்ளிட்டோரிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதே போல் பெண் பிள்ளைகளை தனிமையில் வெளியில் அனுப்பி வைப்பதும், வீட்டில் தனிமையில் இருக்க செய்வதும் ஆபாத்தானது.

    ReplyDelete
  2. இந்த உலகம் இப்போது மிருகத்தனமாக மாறி கொண்டு இருக்கிறது, நான்கு பேருக்கும் ஆண்மை நீக்க அறுவைசிகிச்சை செய்து வெளியில் விடவேண்டும் இல்லையென்றால் தொடர்கதையாக போய்விடும் அல்லது தாலிபான்கள் என்ன தண்டனை கொடுப்பாங்களோ அதே கொடுத்தால் நல்லது தான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.