இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் பயாஸுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தென் மண்டலச் செயலார் உவைஸ் அவர்கள் நிகழ்ச்சியின் அறிமுக உரையை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக, இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் மகபூப் சரீப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜித்தா, தமிழ் மீடியா ஃபோரத்தின் செயலாளர் ஜபருல்லாஹ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் இந்திய தேசம் 69-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் சுதந்திரத்திற்கு சொந்தக்காரர்களாகிய அனவரும் சுதந்திரமாக வாழ வாழ்த்து தெரிவித்ததோடு, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்தை கொண்ட இந்தியா இன்று பாராபட்சத்தை காட்டுவதில் உச்சத்தை எட்டியுள்ளதையும், நீதீகள் மறுக்கப்பட்டு அநீதிகள் அரங்கேற்றப்படுவதும், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்து விட்டதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு துனை தலைவர் முஹம்மது ரஃபீ அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றிய இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் வட மண்டலத்தலைவர் ஜமீல்தீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.