.

Pages

Saturday, August 22, 2015

இன்டேன் கேஸ் பாலு அவர்களோடு அதிரை சேர்மன் நடத்திய நேர்காணல் ! [ காணொளி இணைப்பு ]

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையின் தன்னார்வலர்கள் இணைந்து, பொதுநலன் சார்ந்த முக்கிய கேள்விகளை முன்வைத்து, இன்டேன் கேஸ் விநியோகஸ்தர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களை, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், அபூதாகிர், சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் மற்றும் அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் அருமையான மாலைப்பொழுதில் அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.

கலந்துரையாடலில்...
1. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவரையில் நேரடி மானியம் பெரும் வாய்ப்பை தவறவிட்ட நமதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாடிக்கையாளர்களின் விவரங்கள் ? மானியம் பெரும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் மீண்டும் பெற தங்களின் நடவடிக்கைகள் ?

2. புதிதாக காஸ் இணைப்பு பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு  உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமா ?

3. காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை  வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழும் புகார் உள்ளிட்டவை குறித்து...

அதிரை சேர்மன் எழுப்பிய கேள்விகளுக்கு, திரு.பாலு அவர்கள் நமக்களித்த பதில் இதோ....


1 comment:

  1. நமதூர் இன்டேன் கேஸ்சின் ஒரு பகுதி கிளை கொள்ளுக்கட்டில் இயங்குவதாக சகோ .ஜமால் முகமது அவர்கள் மக்கள் மத்தியில் அதிகம் எடுத்துரைத்து அவற்றை மறுபடி நமதூருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முன் கூறி வந்தார் அதுபற்றிய விளக்கம் இந்த பதிவில் கேட்டு இருக்கலாமே ???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.