தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹாலில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நுகர்வோர் தின விழாவில் பங்கேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
நுகர்வோர்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நுகர்வோர் விழிப்புணர்வில் மூன்று பேர் அங்கத்தினர்கள் முதலாவதாக நுகர்வோர் சட்டத்தைஅமல்படுத்தும் அலுவலர்கள். இரண்டாவதாக வணிகர்கள். மூன்றாவது நுகர்வோர்கள். நாம் எல்லோருமே நுகர்வோர்கள் தான். நுகர்வோர் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசும் நிதிமன்றம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நுகர்வோர் சட்டத்தின் மூலம் பொது மக்கள் அனைவரும் அதன் பயன்களை பெற முடியும். பொதுவாக கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது நமது பணியை செயல்படுத்தாமல் வந்துவிடுகிறோம்.
எந்த பொருள் வாங்கினாலும் பில் இல்லாமல் வாங்கக் கூடாது. நுகர்வோர் சட்டத்தை முறையாக செயல்படுத்தினால் 70 சதவிகிதம் நுகர்வோர் தேவைகள் முறையாக நிறைவேறும். மீதமுள்ள 30 சதவிகிதம் சில்லரை விற்பனையாளர்கள், அமைப்பு இல்லாத நிர்வாகம் மூலம் செயல்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நுகர்வோர் சட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லி மாற்றத்திற்கான முதல் விதையாக இருக்க வேண்டும். பில் இல்லாமல் எந்த பொருளும் வாங்கக்கூடாது பெற்றோர்களிடம் உறுதி எடுத்து கொள்ள சொல்ல வேண்டும். பொருட்கள் வாங்கும் பொழுது தர பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நுகர்வோர் சட்டத்தை பற்றி பொது மக்கள் எல்லோரிடம் கொண்டு செல்லுங்கள். அதில் நாம் அனைவரும் பயன் பெற உதவியாக இருக்கும்.
ஒரு பொருளை வாங்கும்போதும் அல்லது மாற்றிக்கொள்ளும் போதும் அறிவிக்கப்படும் பரிசு விளம்பரங்கள் குறித்து கவனமுடன் தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுப் பொருட்களுக்காக இலவச இணைப்புக்காக தரமற்ற அல்லது தேவையற்ற பொருட்களை வாங்குதல் கூடாது. கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறக்கூடாது. மருந்து பொருட்களை வாங்கும் போது மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்தை சரிபார்த்தும் வாங்கிய மருந்துகளுக்கு முறையான ரசீது பெற வேண்டும். மருந்துகளை எப்படிசாப்பிட வேண்டும் எத்தனை முறை சாப்பிட வேண்டும், எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் போன்ற தகவல்களை பெற்று அதன் பயன்படுத்த வேண்டும். நுகர்வோர் விழிப்படைய சுற்றுச்சூழல் நண்பராகவும், முடிந்த வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் வேண்டும்.
கடைக்கு செல்லும் போது வீட்டில் இருக்கும் துணி, சணல் பைகளை எடுத்து செல்ல வேண்டும். வீட்டு கழிவுகளை வீதிகளை எறியாமல் குப்பைத் தொட்டியில் போட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு, அப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், பயிற்சி ஆட்சியர் திரு.தீபக்ஜேக்கப், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சு.கங்காதரன், நுகர்பொருள் வாணிபக கழக முதுநிலை மண்டல மேலாளர் திரு.பி.மணிமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ச.சுப்ரமணியன், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் திரு.ஏ.வெங்கடேசன், உணவு பாதுகாப்ப நியமன அலுவலர் டாக்டர் என்.தட்சிணாமூர்த்தி, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் திரு.சு.கலியமூர்த்தி, திரு.சுகுமாறன், திரு.கோ.கலியமூர்த்தி, திரு.வே.குழந்தைவேலு, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.க.கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர்கள் திரு.மனோகரன், திருமதி.சுஜாதா மற்றும் மாணவ மாணவியர்கள் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.