நேற்று நள்ளிரவில் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்து ஏரி போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து நீர் நிரம்பிய குளத்தை இந்த பகுதியினர் ஆர்வத்துடன் வந்து பார்வையிடுகின்றனர். நீரின் மட்டம் இன்னும் சில அடிகள் உயர்ந்தால், குளம் நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடும் நிலையை எட்டிவிடும்.
இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்று வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்புவேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகர் குடியிருப்பில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...
அல்ஹம்துலில்லாஹ், ஒரு மழையிலேயே நிறையச் செய்த அல்லாஹ் மட்டும் புகழுக்குரியவன். தண்ணீர் நிரம்பி வருகிறது சந்தோஷம் ஆனால் சென்ற ஆண்டைப்போல் கோட்டை விடப்படாமல் பெருமளவில் கசிந்தோடும் தண்ணீரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? இனி விழிக்க நேரமில்லை. உடன் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை மட்டுமே செடியன்குள நீரை காப்பாற்றும். மேலத்தெரு, கீழத்தெரு சங்கங்கள் உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ReplyDelete