இந்தியன் சோசியல் போரம் (ISF)', ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டி, ரியாத்திலுள்ள லக்கி குரூப் நிறுவனத்தோடு இணைந்து 69வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக பொதுக்கூட்டம் ஒன்றை நேற்று 15-08-2015 அன்று பத்தாவிலுள்ள ஹோட்டல் ரமாத் ஆடிட்டோரியத்தில் வைத்து நடத்தியது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் மறைந்த மக்கள் குடியரசுத்தலைவர் Dr. A.P.J அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் விதமாக 'அப்துல் கலாம் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
சரியாக இரவு 08:40 மணிக்கு அனைவரும் எழுந்து நிற்க அல்லாமா இக்பால் அவர்களின் ஒற்றுமை கீதம் ஒலிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியன் சோசியல் போரம், ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது முஸ்தபா வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் தலைவர் பைசல் ரஹ்மான் தன்னுடைய தலைமையுரையில், "தியாகங்களாலும் அர்ப்பணிப்புகளாலும் மிகப்பெரும் விலை கொடுத்து சுதந்திரம் வாங்கித்தந்த நம் தேசத்தலைவர்கள் வடிவமைத்த மதசார்பற்ற இந்தியாவை மதவாத நாடாக மாற்ற துடிக்கும் மத்தியில் அமர்ந்திருக்கும் மோடியின் தலைமையிலான அரசின் மதத்துவேச செயல்பாடுகளையும்; எங்கெங்கும் வியாபித்திருக்கும் கட்சி வேறுபாடில்லாத அரசியல்வாதிகளின் லஞ்ச,ஊழல் குற்றங்களையும் எடுத்துரைத்து இவற்றிக்கு மாற்றமாக போராட்ட அரசியல் நடத்திவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலப்போராட்டங்களையும் எடுத்துரைத்தார்".
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட இந்தியா பிராடேர்நிட்டி போரம் (IFF), ரியாத் மண்டல செயலாளர் ஜூனைத் அன்சாரி, தமிழ்ப்பிரிவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் ஹுசைன், இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலினுடைய சேர்மன் ஹைதர் அலி, தபர்ரஜ் (TAFAREG) குழுமத்தின் செயலாளர் ஷாஜஹான் என்ற ஷேக் முஹம்மத், ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துரைகளை வழங்கினர்.
சிறப்பு பேச்சாளர்களாக கலந்துக்கொண்ட 'இந்தியன் சோசியல் போரம் (ISF)', ரியாத் சென்ட்ரல் கமிட்டியின் துணைத்தலைவர் டாக்டர் முஹம்மத் யூசுப் 'தேசத்தின் வளர்ச்சியில் கலாம் அவர்களின் தொண்டுகள்' என்கிற தலைப்பில், "அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் துறையில் மட்டுமல்ல மருத்துவத்துறையிலும் ஆற்றிய பணிகளை குறிப்பிட்டு அவருடைய எளிமையான வாழ்க்கை; சாமானிய மக்களோடும் கொண்டிருந்த நெருக்கத்தையும் குறிப்பிட்டு பேசினார்".
'இந்தியா பிராடேர்நிட்டி போரம் (IFF)', ரியாத் மண்டல தமிழ்ப்பிரிவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மௌலவி ஷர்புதீன் அல்தாபி அவர்கள் 'பெற்ற சுதந்திரத்தை பேணிப்பாதுகாப்போம்' என்கிற தலைப்பில், "சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 68 ஆண்டுகளில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களை சுதந்திரம் சென்று அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டி சுதந்திரத்திற்காக எதையும் செய்திடாத மதவாத சக்திகளின் தேசவிரோத செயல்பாடுகளை; சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை தோலுரித்துக்காட்டினார். தந்தை பெரியாரின் எழுச்சி மிகுந்த பிரச்சாரங்களால் கால் பதிக்க முடியாத சங்கப்பரிவார கூட்டம் அவருடைய மண்ணிலே அவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவித்தார். மேலும் நேரடியாக எதையும் சாதித்துவிட முடியாத அவர்கள் தமிழகத்தை ஆள்பவர்களின் துணையோடு தடம் பதிக்க முயற்ச்சிப்பதை சுட்டிக்காட்டி வரும் தேர்தலில் இந்த மதவெறிக்கூட்டத்தோடு சேர்த்து அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பவர்களும் தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்".
மேலும் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் விழிப்புணர்வு நாளிதழான 'புதியப்பதை' மாதமிருமுறை இதழ் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. 'இந்தியன் சோசியல் போரம் (ISF)', ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் பொதுச்செயலாளர் இஞ்சினியர் ரஷீத் கான் அவர்கள் வெளியிட இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலினுடைய சேர்மன் ஹைதர் அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நிறைவாக 'இந்தியன் சோசியல் போரம் (ISF)', ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் செயலாளர் இப்ராஹிம் ஜஹபர் நன்றியுரை நிகழ்த்தினார். மற்றொரு செயலாளர் சர்தார் என்ற ஷாகுல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் திரளாக கலந்துக்கொண்ட அனைவரும் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நாடு விட்டு வந்திருந்தாலும் தேசியக்கொடியை தங்கள் மார்பகங்களில் அணிந்து தாங்கள் இந்தியர்கள் என்பதை பெருமையாக வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.