இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கும் கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார். அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இவரது படைப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட 69 வது ஆண்டு சுதந்திர தினவிழாவில் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீரா கெளரவிக்கப்பட்டார். இவருக்கு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவ மாணவிகளின் பார்வைக்காக இவரது படைப்பு பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள இவரது பிரைட் எலெக்ட்ரிக் கடையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இவருடைய படைப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்து இவரை ஊக்குவிக்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக இருக்கிறது. பிறந்த மண்ணிற்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீராவை நாமும் வாழ்த்தி ஊக்குவிப்போம்.
நாட்டுக்காக மக்கள் ஜனாதிபதி கலாம் செய்த படைப்புகளை, எண்ணங்களை செயல்வடிவமாக சித்தரிக்க தன் ஆற்றும் பணிக்கு வாத்துக்கள், இந்தியா, சுதந்திரம் என்ற முதல் தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றது. அதே போல 'வளர்ந்த இந்தியா' என்ற 2வது தொலைநோக்கில் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என அப்துல்கலாம் சொன்னதை உறுதி ஏற்ப்போம்.
ReplyDelete