சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா
மற்றும் இலங்கைக்கு, 4 மணி நேர சிற்றலை ஒலிபரப்பும், இலங்கைக்கு 4 மணி நேரப்
பண்பலை நிகழ்ச்சியும், ஒலிபரப்ப்ப்படுகின்றன. மேலும், இணையத்தளம், வீட்டியோ, செல்லிட பேசி, சீனத்
தமிழொலி எனும் இதழ் முதலிய பல்லூடக சேவைகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.
இணையத்தளம்:http://tamil.cri.cn
சிற்றலை ஒலிபரப்பு:
இந்திய நேரம், இரவு 7︰30-9︰30
31.35 மீட்டர்—9570 கி.ஹர்ட்ஸ்
31.04 மீட்டர்—9665 கி.ஹர்ட்ஸ்
காலை 7︰30-9︰30
22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ்
21.84 மீட்டர்—13735 கி.ஹர்ட்ஸ்
இலங்கை பண்பலை 97.9︰
இலங்கை நேரம், பிற்பகல் 1:30-3:30
இரவு 7:30-9:30.
49 ஆண்டுக்கால
வளர்ச்சி மூலம், எங்கள்
நேயர்கள், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, செளதி அரோபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ்
நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு
செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும்.
ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை
வரிசையில் முன்னணியில் உள்ளது.
தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, தமிழ்ப் பிரிவில் 19 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
நன்றி: சீன வானொலி.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.