.

Pages

Thursday, August 27, 2015

துபாயில் நான் ஸ்டாப் ஃப்ளைட் !

தொடர்ந்து 17 மணி நேரம் பறக்கும் உலகின் நெடுநேர இடைநில்லா விமானச் சேவை: துபாயில் இருந்து விரைவில் துவங்க இருக்கிறது.

வழியில் எங்கேயும் தரை இறங்காமல் துபாயில் இருந்து புறப்பட்டு மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா நகர் வரை சுமார் 17 மணிநேரம் 35 நிமிடங்களுக்கு பறந்து செல்லும் உலகின் நெடுநேர இடைநில்லா விமானச் சேவையை எமிரேட் விமான நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

வரும் ஆண்டின் (2016) பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இந்த புதிய சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ன் இணையதளம் மூலம் தொடங்கி விட்டதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீண்டநேர தொடர் பயணத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 'போயிங் 777 200LR' ரக விமானத்தை இதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் வகுப்புக்கு எட்டு இருக்கைகளும், பிஸ்னஸ் கிளாஸுக்கு 42 இருக்கைகளும், மீதமுள்ள 216 இருக்கைகள் எகானமி கிளாஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அன்றாடச் சேவையாக துபாயில் இருந்து புறப்படும் விமான எண்: EK251 உள்ளூர் நேரப்படி, காலை 8.05 மணிக்கு புறப்பட்டு, அமெரிக்க நேரப்படி அன்று மாலை 4.40 மணிக்கு பனாமா நகரை சென்றடையும். இதற்கு எதிர்திசையில் பனாமா நகரில் இருந்து தினந்தோறும் உள்ளூர் நேரப்படி இரவு 10.10 மணிக்கு புறப்படும் விமான எண்: EK252 துபாய் நேரப்படி, மறுநாள் இரவு 10.55 மணியளவில் இங்குவந்து சேரும் என எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கும் (சுமார் 17 மணி நேர பயணம்), தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டா நகருக்கும் (சுமார் 16 மணி 40 நிமிட நேர பயணம்), துபாயில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கும் (சுமார் 16 மணி 35 நிமிட நேர பயணம்) மூன்று இடைநில்லா தொலைதூர மற்றும் நீண்ட நேர விமானச் சேவைகள் நடைமுறையில் உள்ளது.

இதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு சுமார் 19 மணி நேரம் பறந்து செல்லும் விமானச் சேவையை பெட்ரோல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் நிறுத்தி விட்டது.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, வழியில் எங்கேயும் தரை இறங்காமல் துபாயில் இருந்து புறப்பட்டு பனாமா நகர் வரை சுமார் 17 மணிநேரம் 35 நிமிடங்களுக்கு பறந்து செல்லும் இந்த புதிய விமானச் சேவை விரைவில் உலகின் நெடுநேர இடைநில்லா விமானச் சேவையாக சாதனை படைக்கவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.