இந்நிலையில் அதிரை பேரூர் அதிமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தை அதிரை பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடத்தினர். இதில் இ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர், செருப்பு, துடைப்பத்தால் அடித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு அதிரை பேரூர் அதிமுக செயலாளர் பிச்சை தலைமை வகித்தார், இதில் அதிமுக அதிரை பேரூர் துணைச்செயலாளர் முஹம்மது தமீம், மாவட்ட சிறுபான்மை நல அதிமுக செயலாளர் அப்துல் அஜீஸ், சேதுராமன், அதிமுக வார்டு பொறுப்பாளர்கள் சிவக்குமார், அபூதாகிர், அப்துல் லத்திப், ரவிக்குமார், காமராஜ், ஹாஜா பகுருதீன், லியாகத் அலி, அப்துல் ஜப்பார், அசோக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்திராகாந்தியும் எம் ஜியாரும் கூட்டணி வைக்கும்போது கூட சில திமுக தலைகள்.. "அவளும் அவனும் இணைந்தார்கள்.." என்று கொச்சைப் படுத்தித்தானே கூவினார்கள்? இதுதானே திராவிடக் கலாச்சாரம்? தமிழகமே மது எதிர்ப்பு போராட்டம் நடத்தியும் முதல்வர் எந்த அறிவிக்கையும் கொடுக்காதபோது இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு முக்கியத்துவமாக போய் விட்டது. இதனால் எந்த மாற்றமும் நடக்க போவதுமில்லை, தலைவர்கள் நாகரிகமாக பேசவேண்டும்.
ReplyDelete