காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை வழங்கினார்.
முன்னதாக தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் வரவேற்புரை ஆற்றி நிகழ்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தமிழ் ஆசிரியர் உமர் பாருக் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், இடை நிலை ஆசிரியர் ஆஷா மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDelete