இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. எம்.எம்.எஸ் அப்துல் கரீம், வீ.டி தகளா மரைக்காயர், மான் சேக், புஹாரி, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான ஊர் பிரமுகர்கள் இன்று நிறுவனத்திற்கு வருகை தந்தனர். நிறுவன உரிமையாளர் நூர் முஹம்மது மற்றும் அவரது மகன் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நூர் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'இன்று புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் தரமான நிறுவன செல்போன்கள், மெம்மரி கார்டு, மொபைல் சார்ஜர் உள்ளிட்ட மொபைல் தொடர்புடையை பொருட்கள் அனைத்தும் நியாமான விலையில் விற்பனை செய்ய உள்ளோம். குறிப்பிட்ட சில நிறுவன செல்போன்கள் மற்றும் மெம்மரி கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு. மேலும் அனைத்து நிறுவன மொபைல் ரீ சார்ஜ், டாப் அப் உடனுக்குடன் செய்து தரப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள்.
ReplyDelete