இவரது மகன் முஹம்மது ஆஷிப். அங்குள்ள கல்ஃப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் பள்ளியில் நடந்த தமிழ் கதை சொல்லும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ஆசிரியரின் பாராட்டை பெற்று இருக்கிறார்.
கடந்த வருடம் 'என் அம்மா' என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றான். மேலும் 'தொலைக்காட்சி' பற்றி எழுதிய விழிப்புணர்வு கட்டுரையும் சிறந்த கட்டுரையாக தேர்வு செய்து சென்ற ஆண்டின் பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாஷா அல்லாஹ், வாழ்த்துகள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த மாணவ தம்பிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
மாணவ தம்பி அறிவது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உன்னைப்போல், அதிரையைச் சேர்ந்த அனேக மாணவச் செல்வங்கள், அதிரையிலும், உலகின் பல பாகத்திலிருந்தும், நன்றாக படித்து பல வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். அதிரை வலைதளங்களில் அவர்களின் புகைப்படம், மற்றும் விபரம் எல்லாம் வருகின்றது, ஆனால், பிறகு காணாமல் போய்விடுகின்றனர், எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.
நீங்கள் எல்லோரும் மேலும் நன்றாக படித்து முடித்து அதிரையில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றினால் அதிரைக்கு பெருமை சேர்க்கும் வண்ணமாக இருக்கும். அதிரையர்களுக்கும். பேருதவியாக இருக்கும்.
இது என்னுடைய தாழ்மையான கருத்து.
முயன்றால், இறைவன் நாடினால், இது நடக்கும்.
K.M.A. Jamal Mohamed.
President – PKT Taluk.
National Consumer Protection Service Centre.
(Non-Political Service Centre)
State Executive Member
Adirampattinam-614701.
தங்களின் ஆலோசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இன்ஷாஅல்லாஹ்...என் மகன் இஸ்லாமிய பற்றுள்ள IAS, IPS ஆக துவா செய்யுங்கள்.
DeleteMasha Allah,,,,, Congratulation...., As I am Adirian, belong to West Street, I hereby highly appreciate for him to receiving an award.
ReplyDeleteFurther I wish him and looking forward for his many more achievements on his studies.
Regards,
SM.Sheik (Adirai-West Street)
Thanks for your valuable comments and wishes
DeleteAdirai Mujeeb. F/O Mohammed Asif
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லைஆயிரம் உலகில் பெருமைகள் இல்லைஅன்னை தந்தையே அன்பின் எல்லை''என, நுாற்றுக்கணக்கான பாடல்வரிகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அன்னை தன் பிரசவ காலத்திலும், பிரசவித்த காலத்திலும் தன் உடல் நலத்தைவிட தன்னுள் ஜனித்த கருவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறாள். பத்து மாதங்களும் தனக்கு பிடித்த, பிடிக்காத உணவுகளை சாப்பிட்டு, துாக்கத்தில் புரண்டு படுக்க முடியாமல், மனதில் நல்லெண்ணங்களை வளர்த்து, இறை நம்பிக்கையோடு தன் பிரசவ வலியையும் பொறுத்து, தன் வாழ்க்கையில் மறுஜென்மமாக அவதரித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதோடு நின்று விடாமல் பிள்ளையின் பயணத்தில் துணையோடு பயணிக்கிறாள் ., இப்படி அம்மாக்களின் மகத்துவத்தையும் பெருமையும் சொல்லிக்கொண்டே போகலாம். அழகிய செந்தமிழில் "என் அம்மா " என்ற வாத்தையை உள்ளத்தில் பொங்கியதை உருக்குமாக பேசிய மாணவர் ஆஷிப் பாரட்டக்குரியவரே ...வாழ்த்துக்கள் ... அம்மாவில் தொடங்கி... தொடர்ந்து தன் ஆதங்களாக பல படைப்புகள் வரட்டும்.
ReplyDeleteபாராட்டுக்கள். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதந்தைக்கேற்ற தனயன். பெயர் சொல்லும் பிள்ளை.
கருத்திட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஉங்களின் கருத்தும் வாழ்த்தும் என் மகனை மிகவும் உற்சாகத்தை ஊட்டும். ஜஜாக்கல்லாஹ் ஹைர்.
அதிரை முஜீப்