.

Pages

Thursday, February 11, 2016

துபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

துபாய் : அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் சார்பாக "சங்கமிப்போம்"  என்ற மாபெரும் சங்கம விழா நாளை 12/02/2016 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் கிஸைஸ் கிரசண்ட் பள்ளியில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், திறமைசாலிகள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அத்தோடு அமீரகத்திற்கு வருகை புரிந்திருக்கும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தேசிய நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அமீரக வாழ் இந்தியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் நடைபெற இருக்கிறது.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.