.

Pages

Friday, February 12, 2016

அதிரை பேரூராட்சியில் மஹ்ரிப் தொழுகை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று [ 12-02-2016 ] மாலை பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு  ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு  ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மஹ்ரிப் நேரம் வந்தபோது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மஹரிப் தொழுகையை அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினார்கள். இதில் 3 வரிசைகளில் நின்று தொழுதனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.