அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் JRC துவக்க விழா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கான முதலுதவி பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் JRC புதிதாக தொடங்கப்பட்டது. இவற்றை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட JRC மாவட்ட அமைப்பாளர் பிச்சுமணி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு நம்பிவயல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை கோமதி JRC பாடல் பயிற்சியை அளித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட IRCS மாவட்ட முதலுதவி பயிற்றுனர் துளசி துரைமாணிக்கம் மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பயிற்சி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மயக்கம், தீ விபத்தில் சிக்கியவர்கள், எலும்பு முறிவு, விஷ வாயுவில் சிக்கியவர்களை மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது மற்றும் வலிப்பு நோய்க்கு முதலுதவி செய்வது குறித்து செயல்முறை விளக்கத்தில் கூறப்பட்டன.
முன்னதாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.சசிக்குமார் வரவேற்று நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பு செய்தார். முடிவில் நன்றி கூறினார். இதில் பள்ளி JRC மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.