.

Pages

Friday, February 19, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 31 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/02/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.                

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை     : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கூட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாத நபர்கள் முன்பு அறிவித்தபடி அந்தந்த பொறுப்புதாரிகளிடம் பைத்துல்மாலின் பொது வளர்ச்சிக்காக மாத சந்தாவை கொடுத்து உதவு மாறு அன்போடு கேட்டு கொள்ளப்பட்டது,

2) அடுத்து வரும் கூட்டத்திற்கு நமதூர் ரியாத் வாழ் மக்கள் அனைவரையும் அழைப்பதென முடிவு செய்யப்பட்டு அதில் குறிப்பாக புதிய உறுப்பினர்களும், பொறுப்புதாரிகளும் தவறாது வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டு கொள்ளப்பட்டது.

 3) பல வருடங்களாக செயல்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை      ( பென்சன் ) ரூ 600/- வீதம் 200 நபர்களுக்கு மேல் மாதாந்திரம் எவ்வித குறையின்றி கொடுத்து வரும் அதிரை பைத்துல்மால் தலைமையகத்துக்கு, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக மனமாற நன்றியை தெரிவித்து மேலும் திறம்பட செயல்பட துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 11-ம் தேதி MARCH 2016 முதல்  4.30 PM முதல் மஹ்ரிப் வரை ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.