அதிரையில் இன்று காலை லயன்ஸ் சங்கம் சார்பில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கண்தானம் விழிப்புணர்வு பிராச்சார பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்கத்தலைவர் என் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க 'பார்வைக்கோர் பயணம்' மாவட்ட தலைவர் விநாயகம் கண்தானம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். பேரணியை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி கொடியசைத்து தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து பேரணி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டது. பேரணியில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க கண் தானம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கும் வாக்கியங்களை கொண்ட பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையிலேந்தி ஊர்வலமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
முடிவில் பேரணி அதிரை பேரூந்து நிலையம் வந்தடைந்தது. இதில் அதிரை லயன்ஸ் சங்கத்தலைவர் என் ஆறுமுகச்சாமி உரை நிகழ்த்தி நன்றி கூறினார்.
பேரணியில் காதிர் முகைதீன் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ். நாகராஜன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மோர் பானம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.