.

Pages

Friday, February 12, 2016

இலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது "முகநூல்'

இணையதளச் சேவைகளுக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தடை விதித்துள்ளதை அடுத்து, இலவச இணையச் செயலி (ஃப்ரீ பேசிக்ஸ்) சேவையை இந்தியாவில் விலக்கிக் கொள்வதாக, "முகநூல்' (ஃபேஸ்புக்) நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செய்தியில், "இலவச இணையச் செயலி சேவை இனி இந்தியாவில் இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், முகநூல் நிறுவனத்தின் "ஃப்ரீ பேசிக்ஸ்' சேவையும், ஏர்டெல்லின் "ஜீரோ ரேட்டிங்' சேவையும் முடிவுக்கு வந்துள்ளன.
முன்னதாக, இண்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பெயரிலான சேவையை "முகநூல்' நிறுவனம் 2014ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளை குறைந்த கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட இணையதளங்களைத் தவிர, பிற இணையதளங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றும், இதனால் இந்தியாவில் இணையச் சமநிலைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்தனர்.

"ஃப்ரீ பேசிக்ஸ்' சேவைக்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, இணையதளச் சேவைகளுக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிப்பதற்கு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் சில தினங்களுக்கு முன் தடை விதித்தது.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.