.

Pages

Sunday, February 14, 2016

அதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் 60 யூனிட் இரத்தம் பெற்றனர் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இன்று [ 14-02-2016 ] காலை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சம்பை ஹெச்.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். அதிரை கிளைத் தலைவர் ஜமால் முகம்மது, கிளைச் செயலாளர் அதிரை ராஜிக் முகமது, அமீரக பொறுப்பாளர் அதிரை நசீர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

காளி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ஐ. சண்முக சுந்தரம் தலைமையில் மருத்துவ குழுவினர் குருதிக்கொடையாளர்களிடமிருந்து 60 யூனிட் வரை இரத்தத்தை தானமாக பெற்றனர்.

இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் முதல் நபராக வந்து இரத்தத்தை தானமாக வழங்கினார். மேலும் திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், டாக்டர் சேக் அலி உட்பட தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் - உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான குருதி கொடையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.

முகாமில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் காளி இரத்த வங்கி மருத்துவ குழுவினருடன் இணைந்து இரத்த கொடையாளருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். முகாம் தொடர்ந்து மதியம் 2 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் 60 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.