அமெரிக்காவினைச் சார்ந்த ‘டைமீனிக்’ என்ற பெண் 1973ம் வருடம் வருங்கால போப்பான போலந்து நாட்டின் கார்டினல் ‘கரோட்டினை’ தத்துவம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தமாக சந்தித்து ஒரு புத்தகம் எழுதுவதிற்காக போலந்து நாட்டினுக்குச் சென்று கிறுத்துவ மதக் குருவினை சந்தித்தார். அது ஒரு காலக் கட்டத்தில் மிகவும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், அதுவே ஒரு காலக் கட்டத்தில் கார்டினல் துறவரத்தினை விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு சென்று விடலாம் என்று தோன்றியதாகவும், போலந்து தேசிய நூலகத்தில் பாதுகாக்கப் பட்ட கடித போக்குவரத்தில் இருந்து புலனாகிறது என்று பி.பி.சி. நிறுவன செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாக்கி உள்ளது. அந்தக் கார்டினல் தான் பிற்காலத்தில் போப் ஜான் 2 என்று அழைக்கப் பட்டார்.
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க, ஜெர்மனி, ஹாலந்து,ஆஸ்ட்ரிய, ஐயர்லாந்து போன்ற நாடுகளில் பாதிரிமார்கள் தேவாலயத்தில் சாமி-கோரஸ் பாடும் சின்னஞ்சிறு பாலகர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை 14.3.2010 தேதியிட்ட ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டு மக்கள் கிறித்துவ பாதிரியார்கள் தேவாலயங்களில் சேவையாற்ற சென்ற சிறுவர்களை பாலியல் குற்றத்திற்கு தள்ளியது கண்டு கொதித்தெழுந்து அந்த நாட்டு மக்களின் கோபாதாபங்களை 12.3.2010 அன்று ஜெர்மன் நாட்டு பிஷப்புகள் போப் ‘பெண்டிக்கினை’ச் சந்தித்து எடுத்துரைத்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. பல்வேறு மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டப் படி செல்லும் என்று கூறப் பட்ட நிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் இது சம்பந்தமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இ.த.ச 377( கிரிமினல் சட்டத்தினை) பரிசீலித்து அறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உத்திரவிட்ட செய்தி வந்துள்ளது பற்றி உங்களுக்குத் தெரியும்.
அல் குரான் அத்தியாயம் 29:28:29 அல் அன் கபூத்தில், 'லூத்தை நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர் தம் சமூகத்தாரிடம் மானக் கேடான ஒரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். உலகத்தாரில் எவரும் அதைகண்டு உங்களை முந்தவில்லை, நீங்கள் பெண்களை விட்டு ஆண்களிடம் மோகம் கொண்டவர்களாக வருகின்றீர்களா' என்று கூறி அந்தக் கூட்டத்தினருக்கு சொல்ல, அதனை அவர்கள் உதாசீனப் படுத்திய நேரத்தில், அந்த சமூகத்தினவருக்கு தாங்க முடியாத மவேதனையைக் கொடுத்தான் எல்லாம் வல்ல அல்லாஹ்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக குத்துச் சண்டை சாம்பியனும், வருங்கால ஜனாதிபதியாக கனவில் இருப்பவருமான மேனி பக்யு 16.2.2016 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'மனிதனும், மனிதனும், பெண்ணும், பெண்ணும் பாலின சேர்க்கையில் ஈடுபடுவது மிருகத்தினை விட கேவலமானது. எந்த மிருகமாவது அதே இனத்துடன் பாலினத்தில் ஈடுபடுகின்றதா, பின் ஏன் மனிதன் அதனைப் பற்றி பேசவேண்டும், அந்தக் கேவலமான செயலில் ஈடுபட வேண்டும். எந்த மனிதன் தன் இன நபருடன் இன்பத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் மிருகத்தினைவிட கேவலமானவரில்லையா' என்று கூறியிருப்பது அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது.
மனிதர்களுக்கு திருமணம் ஏன் அவசியம் என்பதினை அல் குரான் அந் நூரில்(24:32) தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான் என்பது ஈமான் உள்ளவர்களுக்குப் புரியும்.
திருமண வாழ்வு ஒரு மனிதனை புனிதனாக்கிறது. திருமண வாழ்க்கை அவனை முழு மனிதனாக்குகிறது.
திருமண வாழ்வு என்பது வாழ்க்கையில் மனிதர்களை தன்னல வாதியாகவும், சுய இன்பம் கொள்பவர்களாகவும் இருப்பதிலிருந்து தடுக்கும் ஒரு தடுப்பு அணை. மண வாழ்வு என்பது ஒரு மனிதன் தன் மனைவியுடன் உனக்கு நான், எனக்கு நீ என்று செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம். மனிதன் அமைதி பெற்று இளைப்பாறும் பசுமையாக பெண் இருக்கிறாள். இன்பத்தினைத் தரும் அதே நேரம், கணவனுக்குத் துன்பம் வரும்போது தனது எல்லா சுகத்தினையும் அவனுக்காக தியாகம் செய்து அவனை பாதுகாக்கும் பெட்டகமாகிறாள் என்பது கண்மணி ரசூலல்லாஹ் அவர்களுக்கு கதிஜாப் பிராட்டியார்(ரழி) அவர்கள் துன்பம் வரும்போது காப்பாற்றியது பற்றி அனைவரும் படித்திருக்கின்றோம்.
திருமணம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள பாசப் பிணைப்பினை ஏற்படுத்தும் சமூக அமைப்பாகும்.
அந்த சமூக அமைப்பின் விரிசல் அந்த சமூக அமைப்பினையே தகர்த்து விடும். திருமணம் என்பது மேலை நாடுகளில் அவை ஒரு பாலின உணர்ச்சி வசப்படுகிற சடங்காகவே உள்ளது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் திருமணம் ஒரு சிவில் சட்டத்திற்குள் அடங்குவதில்லை. மாறாக திருமணம் இஸ்லாத்தில் உணர்ச்சிகரமான, உடல் ரீதியான, மத சார்பான ஒருங்கிணைப்பாகும். உடல் ரீதியான ஒருங்கிணைப்பு என்பது மணமக்கள் தங்களுக்கென்று வருங்கால சந்ததிகளான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.
கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ ஞானி அகஸ்டின், 'திருமணம் என்பது சமூக, நல்லிணக்க, நல்லொழுக்கம் ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகும்’ என்று கூறுகிறார்.
திருமணம் ஒரு உரிமை மட்டுமல்ல. மாறாக ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுப்பாகும், இணைப்புப் பாலமாகும்.
ஆமாம் இவையெல்லாம் தெரிந்ததும், கேள்விப் பட்டதும் தானே பின் ஏன் இதனைச் சொல்கிறார் என்று உங்களுக்குக் கேள்வி கேட்கத் தோன்றுவது இயற்கையே!
சமீப கால திருமணங்கள் நானா, நீயா என்று போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் விமரிசையாக செய்து, சென்னையினை நவம்பர்-டிசெம்பர், 2015ல் புரட்டியெடுத்த அடைமழை ஓய்ந்த பின்புபோல திருமணம் முடிந்தாலும் மணமகள், மணமகன் வீட்டிற்கு சென்ற சில மாதங்களிலேயே தாய் வீட்டிற்கு அழுகையும், பெட்டியும் கையுமாக திரும்பும் செய்திகள் எங்கே சமூதாய கட்டுக் கோப்பினை குழைத்து விடுமோ என்று பயமாக இருப்பதினால் நான் மேல்கோள் காட்டுகின்றேன். முன்பெல்லாம் மனைவியினை விட்டுவிட்டு பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா போய் இரண்டு அல்லது மூன்று வருடம் சென்று மனைவியினைப் பார்க்கும் காலம் கரை ஏறிவிட்டது. அப்போது கூட கண்டதே கணவன், கொண்டதே கோலம் என்று எப்போது கணவன் வருவான் என்று காத்திருக்கும் காலம் மலையேறி விட்டது.
இப்போது கணவன் அருகில் இருக்கும் போதே கணவன்-மனைவிக்கும், மனைவி-மாமியார்-நாத்தனார் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து வாழும் பெண்களை, ஆண்களை நாம் காணாமல் இருக்க முடியவில்லையல்லவா? அது ஏன்?
1) திருமணம் நடக்கும்போது நாம் கவனம் செலுத்துவது ஆடம்பர உடைகள், ஆபரண ங்கள், சுவைமிகு உணவு வகைகள், கேளிக்கைகள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகின்றோம். அரேபியால் உள்ளது போல திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகள் ஒத்தக் கருத்துடையோராக்க இரண்டு வீட்டார் முன்னிலையில் கவுன்சிலிங் செய்து நல் போதனைகள் செய்வதில்லை.
2) திருமணம் செய்யும் போது எவ்வாறு இரு வீட்டாரும் இனணந்து வேளைகளில் ஈடுபட்டூமோ அதனை சிறிது சின்னஞ்சிறு மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த கட்டிடம் ஆடாமல், அசையாமல் இருக்க அடித்தளம் போடுவதில்லை.
3) உறவினரும் மூக்குப் பிடிக்க, நா சுவைக்க விருந்து சாப்பிட்ட கையேடு அந்த மணமக்கள் சந்தோச வாழ்க்கை நடத்துகின்றார்களா என்று பார்ப்பதில்லை, மாறாக மணமக்களுக்குள் வேற்றுமை வந்தால் அதனை ஊதி பெரிதாக்கி இன்னொரு விருந்து சாப்பிடமாட்டோமா என்று என்னும் மனநிலை தற்போது இருக்கின்றது.
4) ஜமாத்தாரும் திருமண தினத்தில் பதிவேட்டில் பதியும் அளவிற்கு நின்றுவிட்டு, மன முறிவு பற்றிய வழக்குகள் வரும்போது, அவர்களுக்கு பிரிவு நோட்டிஸ் கொடுக்கும் லெட்டெர் பேடுகளாக இருப்பதினைக் காண்பது வேதனை அளிக்கின்றது.
5) நவீன டி.வி. சீரியல்கள், நெட், செல்போன், சினிமா மோகம் நிறைய இளசுகளின் மனதுகளில் நச்சு விதிகளை விதைத்து விடுகின்றன. அவைகளைப் போக்க வயதான குடும்பத்தினர் முயற்சி எடுக்காது, அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து சிரித்து மகிழ்வது வீட்டுக்கு மட்டுமன்றி,சமூகத்திற்கே வேட்டு வைக்கும் என்று எண்ணுவதில்லை.
6) சில அமைப்புகள் பெற்றோர் சம்பந்தம் பெறாமல் வரும் ஆண்களையும், பெண்களையும் புரட்சி செய்கின்றோம் என்று திருமணம் செய்து வைப்பது அவர்களை பெற்றோர், உற்றார், உறவினரை விட்டு ஒதுக்கித் தள்ளப் பட்டு, இளம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூட நாதியில்லா பரிதாப நிலையினைக் காண முடிகின்றது.
7) மேற்கூறிய நிலை தொடருமேயானால் வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாழாத பெண் மட்டுமல்ல, மண வாழ்வு முறிந்து தனியே வாழும் ஆண்களும் இருக்கும் நிலை வருமல்லவா?
ஆகவே மண வாழ்வு முறியாமல், நமது சமூக அமைப்பினை பலப் படுத்த மார்க்க அறிஞர்கள் கூடிய விரைவில் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி
எழுத்தாளர்
சமூக ஆர்வலர்
எப்படி சிறப்பு கட்டுரை ஆரம்பித்து.... அருமையான கருத்துகளை தொகுத்து வழங்கியது இறுதியில் நச்சுன்னு சொல்லவந்ததை சொல்லியிருப்பது சிறப்பம்சம். பிரச்சனைகளுக்கு ஆணிவேராக இருப்பது நாம் பயன்படுத்தும் நெட்,மீடியாக்கள் தான், அப்போதெல்லாம் டேய்! படம் பார்க்க போகாதே ! அவனிடம் சேராதே ! சொன்ன காலம் போய் இப்போ மொபைல் phone 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாதுன்னு கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் காலமாக இருக்கு. தீர்ப்பை ஆதரிப்பவர்களும் உண்டு எதிர்ப்பவர்களும் உண்டு. நம் கேட்டதை வாங்கிக்கொடுப்பதோடு சரி அதனை எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்று கவனிப்பதில்லை. டீன் ஏஜ் பருவத்தை ஒழுங்க டிரைவ் பண்ணினா சேரவேண்டிய இடத்திற்கு போய் சேரலாம் இல்லையேல் சீரழிவு தனக்கு மட்டுமல்லாமல் குடும்பத்திற்கும் சேர்ந்து வரும்.
ReplyDeleteஎந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே ....
சிலர் நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பிலே....
.
சந்ததினரை வழிநடத்தி செல்வதில் பெற்றோருக்கு தான் அதிக கடமை இருக்குன்னு எல்லோரும் சொல்லுறாங்க-
"திருமணவாழ்க்கையில் உனக்கு நான் எனக்கு நீ " என்ற தத்துவத்திலும் பிரச்னை வரத்தான் செய்யுது; மனைவி சொல்வதை அப்படியே "ஆம் " போட்டுவிடுங்கள் வாழ்க்கை வசந்தமாகி விடும் "ஏன்" போட்டு பார்த்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.
கட்டுரையில் சொல்லப்பட்ட" All valid points my lord " என்று உரத்தக்குரலில் சொல்லுவதுப்போல் இருக்கு, இந்த வாரத்தில் சிறப்பான தொகுப்பு எனலாம் - வாழ்த்துக்கள் -வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் மஸ்த்தான் கனி அவர்களே1
ReplyDeleteஎன் மன பிரதிபலிப்பிற்கு முழ ஆதரவு தெரிவித்ததோடு நின்று விடாமல், இன்றைய இளைய தலைமுனர் தான்தோன்றி நவீன மோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கருத்து சொன்னதிற்கு எனது நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் மஸ்த்தான் கனி அவர்களே1
ReplyDeleteஎன் மன பிரதிபலிப்பிற்கு முழ ஆதரவு தெரிவித்ததோடு நின்று விடாமல், இன்றைய இளைய தலைமுறையினர் தான்தோன்றி நவீன மோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கருத்து சொன்னதிற்கு எனது நன்றி.