தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார். டைலர் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பாலாஜி ( வயது 18 ) அதிரையில் தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவன். இவரது நண்பர் ஜெயமுருகன் ( வயது 20 ) அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவன்.
நேற்று மாலை இரண்டு பேரும் வகுப்பு முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அதிரை ஈசிஆர் சாலையில் ஊர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிரை ஹாஜா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் ஹிஷாம் ( வயது 21 ) தனது இருசக்கர வாகனத்தை அதே சாலையில் வலது புறமாக திருப்பியபோது பாலாஜி ஓட்டிவந்த வாகனத்தில் மோதியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலாஜியை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இரண்டு பேரும் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் ECR சாலையில் விபத்து ஒருவன் உயிர் கவலைக்கிடம் மீதி இருவர் படுகாயம் தூக்கிக்கொண்டு பட்டுக்கோட்டைக்கு ஓடுகிறோம் எத்தனை நாளைக்கு இப்படி. நமதூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அதிக அளவில் மருத்துவர்கள் இரவு, பகல் என்று பாராமல் மருத்துவ சேவை செய்ய வேண்டும். பிரியாணி, கோழிக்கறி, ஆட்டுக்கறி என்று நாக்கு ருசியா சாப்பிடுகிறோம். ஒரு நாள் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தால் எங்கே கொண்டு செல்வது. போறவழியில் உயிர் பிரிந்தால் பிரிந்ததுதான். நமதூரில் மருத்துவமனையும், போதிய மருத்துவர்களும் இருந்தால் ஒரு சிலரையாவது காப்பாற்ற முடியும். சிந்தியுங்கள்.
ReplyDelete